பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21-ல் இருந்து 30-ஆக நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் தேர்வு
செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பத்தை www.statebankofindia.com அல்லது
www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்தப்
பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய பிப்ரவரி 23-ம் தேதி கடைசி
நாளாகும்.
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த பிப்ரவரி 23-ம் தேதி கடைசி
நாளாகவும், ஆஃப்லைன் மூலமாக செலுத்த பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாளாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் ஏப்ரல் 28-ம் தேதி
ஆகும். மேலதிக விவரங்களை பெற www.sbi.co.in என்ற இணைய தளத்தில் இருந்து
பெற்றுக் கொள்ளலாம்.
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பணியிட தேர்வுக்கான விதிமுறைகள்:
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிட தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து இப்போது காண்போம்.
பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் காலியாக உள்ள 1,500 Probationary Officers பணியிட தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து இப்போது காண்போம்.
இரண்டு நிலைகளில் Probationary Officers பதவிகளுக்கான தேர்வு நடைபெற
உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, சென்னை, கோவை, மதுரை, திருச்சியிலும்
புதுச்சேரி மாநிலத்திலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்
நிலையில், கொள்குறி முறையில், 200 மதிப்பெண்களுக்கு 4 பிரிவுகளில்
வினாக்கள் இடம்பெறும். இதில் ஆங்கில மொழித் திறன், பொது அறிவு, விற்பனை
மேலாண்மை, கணினித் திறன், தரவு பகுப்பாய்வு, பகுத்தறிதல் சோதனை போன்றவை
அடங்கும். இந்த தேர்வுக்கு 2 மணிநேரம் அவகாசம் வழங்கப்படும்.
மற்றொரு பிரிவில் 50 மதிப்பெண்களுக்கு, விரிவான விடையளிக்க வேண்டும்.
இதில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் கடிதம் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்றவை
இடம் பெறும். இதற்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். இரண்டாம்
நிலையில் ஒரு மணி நேர அவகாசத்தில் குழு விவாதத்திற்கு 20 மதிப்பெண்களும்,
நேர்முகத் தேர்விற்கு 30 மதிப்பெண்களும் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு
தேர்வு நடைபெறும்.
முதல் நிலையின் மொத்த மதிப்பெண் 75-க்கும், 2-ம் நிலையில் பெறும்
மதிப்பெண்கள் 25-க்கும் மாற்றப்படும். இரண்டிலும் தேர்ச்சி பெறுபவர்களின்
பட்டியல், ஸ்டேட் வங்கியின் www.sbi.co.in என்ற இணைய தள முகவரியில்
வெளியிடப்படும்.
No comments:
Post a Comment