சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 2,700ஐ தாண்டியது. மூன்றாண்டு
பி.எல்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட, ஏழு
அரசு சட்டக் கல்லூரிகளும், ஐந்தாண்டு பி.ஏ., -பி.எல்., சட்டப் படிப்பும்,
சென்னையில் உள்ள சட்ட பள்ளியில், ஐந்தாண்டு பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்) -
பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு, கடந்த மாதம், 15ம் தேதி முதல் விண்ணப்ப விற்பனை
துவங்கியது. நேற்றுடன், பி.ஏ., பி.எல்., படிப்பில், 2,000 விண்ணப்பங்களும்,
பி.காம்., பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ., பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில், 700
விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.
No comments:
Post a Comment