கட்டட அனுமதி பெற்றது தொடர்பாக, திருப்பூரில் உள்ள 58 தனியார் பள்ளிகளுக்கு, உள்ளூர் திட்ட குழுமம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திருப்பூர் உள்ளூர் திட்ட குழுமத்துக்கு உட்பட்ட பகுதியில்,
தனியார் பள்ளிகள் அதிகளவு உள்ளன. பொது பயன்பாட்டுக்கான கட்டடங்கள்
கட்டப்படும்போது, உள்ளூர் திட்ட குழும விதிகள் அடிப்படையில், தேவையான பக்க
திறவிடம், "பார்க்கிங்" ஏரியா, விசாலமான வழித்தடங்கள், கழிப்பிடங்கள், தீ
தடுப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட வேண்டும். நேரடியாக,
நகரமைப்பு துறை அனுமதி பெற்று கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.
திருப்பூரில் உள்ள பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், அத்தகைய
விதிமுறை தெரியாமல், உள்ளாட்சி நிர்வாகங்களிடம் மட்டும் அனுமதிபெற்று,
அடுத்தடுத்து கட்டடங்கள் கட்டியுள்ளன.
கோடை விடுமுறை காலத்துக்குள் பள்ளி நிர்வாகங்கள் உரிய
அனுமதி பெற்றுக்கொள்ளும் வகையில், அனுமதி பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை
எடுக்கும் வகையிலும், திருப்பூரில் உள்ள 58 தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர்
திட்ட குழுமம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில், கட்டட அனுமதி குறித்து உரிய ஆவணங்களுடன் உள்ளூர் திட்ட குழுமத்தில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment