மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில்,
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில்
மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., மற்றும்
ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு
செய்யும் நடைமுறை, தற்போது உள்ளது. இதன்படி, சீனியாரிட்டி மற்றும் ஆண்டு
நம்பகத் தன்மை அறிக்கை (ஏ.சி.ஆர்.,) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகாரிகள்,
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறுகின்றனர்.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, இனிமேல், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு
பெற விரும்புவோர், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க
வேண்டும்.
எழுத்துத் தேர்வு, சர்வீஸ் ரெகார்டு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட, நான்கு
கட்டங்களாகத் தேர்வு நடக்கும். இதில், தேர்ச்சி பெறும் அதிகாரிகள்
மட்டுமே, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களிலிருந்து
தேர்வு செய்யப்படுவர்.
நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்துள்ள பரிந்துரைப்படி, இந்த
மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment