பி.எஸ்.என்.எல். சார்பில் தரைவழித் தொலைபேசி
பயன்பாட்டாளர்கள் பயன்பெறும் வகையிலான "விடியோ டெலிபோனி' சேவை
வெள்ளிக்கிழமை கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கோவை
பி.எஸ்.என்.எல். முதன்மைப் பொதுமேலாளர் ஏ.ஷாஜகான் வெள்ளிக்கிழமை
செய்தியாளர்களிடம் கூறியது:பி.எஸ்.என்.எல். விடியோ டெலிபோனி சேவை எனும்
புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தரைவழித் தொலைபேசியில் விடியோ மற்றும்
வாய்ஸ் சேவையை பிராட்பாண்ட் மூலமாக வழங்குவதே இதன் முக்கிய அம்சம்.இதில்
தொலைபேசி அழைப்புகள் டேட்டாக்களாக மாற்றப்பட்டு பிராட்பாண்ட் வாயிலாக
அனுப்பப்படுவதால் எதிர்முனையில் பேசுபவர்களுடன் நேருக்கு நேர் முகம்
பார்த்து தெளிவாகவும், தடங்கலின்றியும் பேசலாம். இதற்கென கணினி தேவையில்லை.
இதற்கான விடியோ திரை மற்றும் காமிரா உள்ளடக்கிய விடியோ தொலைபேசியை
பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. குறைவான கட்டண விகிதத்தில் பேசும் வசதிகள்
உள்ளன.இது குறித்த விபரங்களுக்கு 94861 01049, 0422 2449400 ஆகிய எண்களில்
தொடர்பு கொள்ளலாம் என்றார். துணைப் பொதுமேலாளர் பி.ரத்னசாமி
உடனிருந்தார்.அதைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். தமிழக முதன்மைப்
பொதுமேலாளர் எம்.ஏ.கான் சென்னையிலிருந்தபடியே விடியோ டெலிபோனி மூலமாகவே புதிய சேவையைத் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment