பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுள் ஒருவரான ஜெயசூர்யா அளித்த பேட்டி;
நான் 8ம் வகுப்பு முதல், இந்த வித்யவிகாஸ் பள்ளியில், எனது குடும்ப
சூழல் காரணமாக, இலவச சலுகையின்கீழ் படித்து வருகிறேன். பத்தாம் வகுப்பு
தேர்விலேயே, மாநிலத்தில் முதலிடம் வரவேண்டும் என்று முயற்சி செய்தேன்.
ஆனால், மாவட்டத்தில் மூன்றாமிடம்தான் கிடைத்தது.
எனவே, பிளஸ் 2 தேர்வில், எப்படியும் முதலிடம் பிடித்துவிட வேண்டும் என்ற
குறிக்கோளுடன் படித்தேன். எனக்கு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர், எனது
தாயார் உள்ளிட்ட பலரும் உதவி புரிந்தனர்.
மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்து, பின்னர், முதுநிலை மருத்துவப் படிப்பில் எம்.எஸ்.,ஆர்த்தோ படிக்க விரும்புகிறேன்.
மொத்தம் 1187 மதிப்பெண்கள் எடுத்து, மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்ற ராஜேஸ்வரி கூறியதாவது;
எந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்கிறோம் என்பதற்கே, பெரும்பாலான
மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், அதைவிட, எதில் பலவீனமாக
இருக்கிறோம் என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான்,
திட்டமிட்டு செயல்பட்டு, நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும்.
No comments:
Post a Comment