இன்றைய வாழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. குறைந்த விலை, பலதரப்பட்ட உபயோகம், பலவிதமான உருவாக்கம் மற்றும் உழைப்பின் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உலகில் இரும்புக்கு அடுத்தபடியாக அதிகம் பயன்படுத்தப்படுவது பிளாஸ்டிக். பேக்கேஜிங் துறையில் ரப்பர், மரம், கண்ணாடி, பேப்பர் போன்றவற்றுக்கு மாற்றாக பிளாஸ்டிக் பயன்படுகிறது.
படிப்புகள்
டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, என்ற நிலைகளில் படிப்புகள் தரப்படுகின்றன.
பிளாஸ்டிக்/ பாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., எம்.டெக்., படிப்புகள் உள்ளன. இயற்பியல் அல்லது வேதியியலில் எம்.எஸ்சி., முடித்தபின் படிக்கக் கூடியவை; குறுகிய காலத்தில் படிக்கக் கூடிய பட்டயப் படிப்புகள் உள்ளன.
பி.எஸ்சி.,யில் கெமிக்கல் பிளாஸ்டிக்ஸ், ரப்பர் இன்ஜினியரிங் முடித்து பிளாஸ்டிக் தொழிலோடு தொடர்புடைய எம்.பி.ஏ., படிப்பையும் படிக்கலாம்.
வாய்ப்புகள்
அரசுத் துறையில் ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா லிமிடட், மாநிலங்களிலுள்ள பாலிமர் கழகங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆய்வுக் கூடங்கள், மத்திய பெட்ரோலியத் துறை போன்றவற்றில் பிளாஸ்டிக் டெக்னாலஜி படித்தவருக்கான வாய்ப்புகள் உள்ளன.
தனியார் துறையில் பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் நிறுவனங்கள், பிளாஸ்டிக் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் போன்றவற்றில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் துறை முதலீடு பலமடங்கு அதிகரித்துள்ளது.
சிறப்பான பயிற்சி பெற்றுள்ள துறை வல்லுனர்கள் கவர்ச்சிகரமான சம்பளத்தைப் பெறுகிறார்கள். சிறப்புத் திறன் பெற்றவருக்கு சர்வதேச உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மையங்கள், நல்ல சம்பளத்தைத் தருகின்றன.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி(சிபெட்), சென்னை
* ஐ.ஐ.டி., டில்லி
* கொச்சின் பல்கலைக்கழகம்
* மும்பை பல்கலைக்கழகம்
* மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
இவை தவிர, அரசு பாலிடெக்னிக்குகள், ஐ.டி.ஐ., போன்றவற்றில் 23 ஆண்டுகள் படிக்கக் கூடிய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும் பிளாஸ்டிக் ஆப்பரேட்டர் பிரிவு டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment