அரசுப்பணியாளர் தேர்வு வினாத்தாளில், திருக்குறளுக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள்
காட்டுதல்" என்ற ரீதியில் கேள்வி கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள்
கொடுத்து, விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில்,
தமிழ் மொழியில் இருந்து, 100 மதிப்பெண்ணுக்கு, வினாக்கள் கேட்கப்பட்டது.
பின், பாட திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்ட போது,
எதிர்ப்பு ஏற்பட்டு, அந்த பாடத்திட்டம் கைவிடப்பட்டது.
தற்போது, வெளியிடப்பட்டுள்ள, புதிய பாடத்திட்டத்தில், தமிழ் மொழி
தொடர்பாக, மூன்று பகுதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில், "தமிழ்
அறிஞர்களும், தமிழ் தொண்டும்" என்ற தலைப்பில், திருக்குறளில், 11
அதிகாரங்கள், இடம் பெற்று உள்ளது.
திருக்குறளில் இருந்து, அடியை கொடுத்து, "மேற்கோள் காட்டுதல்" என்ற
ரீதியில் கேள்வி கேட்கப்படும். திருக்குறளில், ஆறு சீர்கள் கொடுத்து,
விடுபட்ட சீர், கேள்வியாக கேட்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment