ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முதல் கட்ட
தேர்வான, "ஜே.இ.இ., முதன்மை" , தேர்வில் பீகாரின் "சூப்பர் 30" நிறுவனம்,
நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் அடுத்த நடக்கவுள்ள ஜே.இ.இ., (கூடுதல்)
தேர்வை எழுதவுள்ளனர். அத்தேர்வில் இவர்களின் வெற்றியை பொறுத்து இந்தாண்டு
"சூப்பர் 30"யில் எத்தனை பேர், ஐ.ஐ.டி.,க்கு தேர்வாகவுள்ளனர் என்பது தெரிய
வரும்.
இந்தியாவில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங்
படிப்பதற்கு, மாணவர்களுடைய ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. படித்து
முடித்தவுடனேயே அதிக சம்பளத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை
கிடைக்கிறது.
இதில் சேர்வதற்கு இந்தாண்டு முதல், ஜே.இ.இ., முதன்மை
தேர்வில் வெற்றி பெற்று, பின் ஜே.இ.இ., (கூடுதல்) தேர்வில் வெற்றி பெற
வேண்டும். இதற்கு முன்னதாக ஐ.ஐ.டி., ஜே.இ.இ., என்ற ஒரே நுழைவுத் தேர்வு
நடத்தப்பட்டது.
தொடரும் சாதனை
பீகாரில் உள்ள "சூப்பர் 30" என்ற பயிற்சி நிறுவனம் ஐ.ஐ.டி.,
நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் 30 ஏழை மாணவர்களை
தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் இந்நிறுவன நிர்வாகி
ஆனந்தகுமார்.
2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்நிறுவனத்தில் படித்த
30 மாணவர்களும் வெற்றி பெற்று "ஹாட்ரிக்" சாதனை படைத்தனர். 2012ம் ஆண்டு
வரை, இவரது நிறுவனம் மூலம் 263 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் சேர்ந்துள்ளனர்.
பின்னணி
2003ம் ஆண்டு இந்நிறுவனத்தை துவக்கினார் ஆனந்தகுமார்.
பின்தங்கிய 30 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு, உணவு, இருப்பிடம்,
பயிற்சியை இலவசமாக வழங்குகிறார். தினமும் 16 மணி நேரம் பயிற்சி
அளிக்கிறார். கடின உழைப்பு, முறையான பயிற்சி, மேற்பார்வை ஆகியவை வெற்றிக்கு
காரணம் என்கிறார் ஆனந்தகுமார்.
ஆண்டு - தேர்ச்சி அடைந்தவர்கள்
2003 - 18
2004 - 22
2005 - 26
2006 - 28
2007 - 28
2008 - 30
2009 - 30
2010 - 30
2011 - 24
2012 - 27
2013 - ?
2004 - 22
2005 - 26
2006 - 28
2007 - 28
2008 - 30
2009 - 30
2010 - 30
2011 - 24
2012 - 27
2013 - ?
No comments:
Post a Comment