பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆறு நாட்களே உள்ளதால்,
உரிய சான்றிதழ்களை பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர். பிளஸ் 2
முடித்த மாணவர்கள், மேல்படிப்பை தொடரவும், முதல் பட்டதாரி சான்று பெறவும்,
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கவும், இருப்பிடம், வருமானம் உள்ளிட்ட
வருவாய்த்துறை சார்ந்த சான்றிதழ் தேவைப்படும்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், சில வாரங்களாக, வருவாய்த்துறை
அலுவலகங்களுக்கு சான்றிதழ் கேட்டு, விண்ணப்பித்து அதிகளவில் செல்கின்றனர்.
"அம்மா" திட்ட முகாம்களுக்காக வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று விடுவதால்,
மாணவர்களது விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
வரும் 20ம் தேதிக்குள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும். அதற்குள் வருவாய்த்துறை சான்றிதழை பெறுவதில்
சிக்கல் நீடிக்கிறது. அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால், உடனுக்குடன்
சான்றிதழ் வழங்குவதில்லை.
விண்ணப்பம் பெற்ற நாட்களில் இருந்து ஐந்து முதல் 10 நாட்கள்
வரை அவகாசத்துடன், டோக்கன் வழங்கப்படுகிறது. அதன் பிறகு பெற்று,
விண்ணப்பிப்பது இயலாத காரியம். எனவே, ஓரிரு நாட்களுக்குள் சான்றிதழ்
வழங்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் செய்ய, முன்வர
வேண்டும் என, மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
No comments:
Post a Comment