2013-14 கல்வியாண்டின் கால்நடை மருத்துவ
படிப்பில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்,
கால்நடை மருத்துவம் (200+80 இடங்கள்), மீன்வளம் (40இடங்கள்), உணவுத்
தொழில்நுட்பம் (20 இடங்கள்) மற்றும் கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் (20
இடங்கள்) ஆகிய இளநிலை பட்டப் படிப்புகளில் சேர அழைப்பு விடுத்துள்ளது.
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 05ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தமிழகம்
முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகத்தின் 18 கல்லூரி /மையங்களில் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.600, ஆதிதிராவிடர் /பழங்குடியினருக்கு
ரூ.300/- மட்டுமே. விண்ணப்பப் படிவத்திற்கான கட்டணத்தினை அருகாமையில் உள்ள
யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளையில் செலுத்தி விண்ணப்பப் படிவத்தினை
பெற்றுக்கொள்ளலாம்.
இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு /
இளநிலை மீன்வள பட்டப்படிப்புகளில், அயல்நாடுவாழ் இந்தியர் (NRI),
அயல்நாட்டினர் (Foreign National) மற்றும் காஷ்மீர் மாநிலத்திலிருந்து
புலம் பெயர்ந்தவர்களுக்காக (Kashmir Migrant) சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பப் படிவங்கள், வழிமுறைகள் மற்றும் இதர
விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tanuvas.ac.in ) 12.05.2013
அன்று வெளியிடப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03.06.2013
அன்று மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட
வேண்டும்.
விண்ணப்பத்தோரின் தரவரிசைப் பட்டியல், ஜூன் மாதம் மூன்றாம்
வாரத்தில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். இதனையடுத்து,
சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment