புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி
விகிதம் 4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் ரங்கசாமி
தெரிவித்துள்ளார்.
100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற கூடப்பாக்கம் மற்றும் லிங்கா
ரெட்டிப்பாளையம் அரசுப் பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை
வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தைப் போன்று, புதுச்சேரியிலும் நேற்று பன்னிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 558
பேரில், 11 ஆயிரத்து 72 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 88 புள்ளி 17
விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும், 4
விழுக்காடு அதிகமாகும்.
No comments:
Post a Comment