சிவகங்கை மாவட்டத்தில், அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 23 நர்சரி பள்ளிகளை மூட, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில், 115 நர்சரி பள்ளிகள், அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்றன.
அரசு விதிப்படி நடத்தாமலும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல், சில பள்ளிகள்
இயங்கின. உதவி தொடக்க கல்வி அலுவலர், நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம்
குறித்து, ஆய்வு செய்தார்.
இதில், 23 நர்சரி பள்ளிகள், அங்கீகாரம் இன்றி இயங்கியது தெரிந்தது.
இதையடுத்து, "மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து, பள்ளியை
மூடவேண்டும்" என, பள்ளி நிர்வாகிகளுக்கு, "நோட்டீஸ்&' அனுப்பப்பட்டு
உள்ளது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வில், 23
பள்ளிகளை மூட, உத்தரவிட்டு உள்ளோம். இன்னும், 20 பள்ளிகள், அங்கீகாரத்தை
புதுப்பிக்காமல் உள்ளன. அவற்றிக்கு அவகாசம் வழங்கியுள்ளோம். அங்கீகாரத்தை
புதுப்பிக்காவிடில், அந்த பள்ளிகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்"
என்றார்.
No comments:
Post a Comment