முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்
நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி
நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன்
மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ரொக்கமாக செலுத்தி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அறிவுரையின்படி எந்தவித தவறுமின்றி ஓ.எம்.ஆர்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேர்வு கட்டண செலானுடன் முதன்மை
கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக
முதன்மை கல்வி அலுவலகத்திற்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ
அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் அனுப்பபடும் விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகங்களில் வரும்
ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு
பின்னர் பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டாது என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment