"நாமக்கல் மாவட்டத்தில், 19 ஆயிரத்து, 167 பேருக்கு, விலையில்லா
லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது" என, விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர்
தங்கமணி பேசினார்.
நாமக்கல் அடுத்த குமாரபாளையம்,
எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா லேப்டாப்
வழங்கும் விழா நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை
வகித்தார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி, 321 கல்லூரி மாணவ,
மாணவியருக்கு லேப்டாப் வழங்கி பேசியதாவது:
அனைத்து தரப்பு மாணவர்களும், முறையான கம்ப்யூட்டர் அறிவு பெறவேண்டும்
என்பதற்காக, விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர்
அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், நாமக்கல்
மாவட்டத்தில், இதுவரை, 19 ஆயிரத்து, 167 மாணவர்களுக்கு, லேப்டாப்
வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு
சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும்,
கல்வித்துறைக்கு சலுகைகள் அளித்திடும் வகையில், நடப்பு நிதியாண்டில், 17
ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்ல வேண்டுமானால், அவசியம்
கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். அதன் அடிப்படையில், இத்திட்டம்
செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு வழங்கும் லேப்டாப்பை, அனைத்து தரப்பு
மாணவர்களும் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment