பொறியியல் படிப்புகளில் சேர இம்மாத 20ம் தேதி
கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக்., படிப்புகளில் சேர மே
4ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
+2 தேர்வு
முடிவுக்கு பின் நாளொன்றுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி
வருகின்றன. கடந்த ஆண்டு மொத்தம் 2.28 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின.
இந்த ஆண்டு விண்ணப்ப விற்பனைக்கு மேலும் 2 நாள்கள் உள்ள நிலையில், கடந்த
ஆண்டைவிட கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
விண்ணப்பங்கள்
மே 20ம் தேதி வரை வழங்கப்படுகின்றது. சிபிஎஸ்இ மாணவர்கள் மே 30ம்
தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். மறுகூட்டல்,
மறுமதிப்பீட்டு அடிப்படையில் தரவரிசை பட்டியல் ஜூன் 12ம் தேதி
வெளியிடப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை
பார்க்கலாம்.
No comments:
Post a Comment