ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது:
ராமநாதபுரம்¢ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள பகுதி நேர கணினி
ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும்
தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை
செய்யப்படவுள்ளனர்.
12ம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று வருட கணினி
பட்டயப்படிப்பு கல்வித்தகுதி பதிவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு
இல்லை.
உத்தேச பதிவுமூப்பு: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
முன்னுரிமையற்றவர்கள் 29.08.2005 வரையிலும், பிற்படுத்த வகுப்பினர்
முன்னுரிமையற்றவர்கள் 28.07.2000 வரையிலும், பொது போட்டியாளர்
முன்னுரிமையற்றவர்கள் 22.05.2002 வரையிலும் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள
விபரத்தை வரும் 17ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து
உறுதி செய்து கொள்ளலாம். அடையாளஅட்டை மற்றும் பதிவுசான்றிதழ், கல்வி
சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
GOOD..computer teachers are important to improve the knowledge of computer science in goverment school students.....
ReplyDelete