பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு
நாளை முதல் விநியோகிக்கப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக
வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 மாணவர்களுக்காக இந்த ஆண்டு மொத்தம் 93 லட்சத்து 78 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 80 சதவீத புத்தகங்கள் முழுவதுமாக அச்சிடப்பட்டுள்ளன. தாவரவியல், விலங்கியல் போன்ற ஒரு சில பாடங்களுக்கான புத்தகங்கள் மட்டும் இன்னும் தயாராகவில்லை.
கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதால், அவற்றை தனியார் பள்ளிகளுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் கல்வியாண்டில் (2013-14) முதல் பருவத்தில் மொத்தம் 5.34 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளன. இவற்றில் 78 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துக்குச் சொந்தமான 22 விற்பனைக் கிடங்குகளிலும், அரசுப் பள்ளிகளுக்கான இலவசப் புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு புத்தகங்கள்: இந்த ஆண்டு பத்தாம் வகுப்புக்காக 67 லட்சத்து 76 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புக்கு 100 சதவீத புத்தகங்களும் அச்சிட்டுள்ளதால், தனியார் பள்ளிகளுக்கு புத்தக விற்பனை தொடங்கியுள்ளது.
மொத்தப் புத்தகங்களில் 51 லட்சத்து 70 ஆயிரம் புத்தகங்கள் இலவசப் புத்தகங்கள் ஆகும். 16 லட்சத்து 6 ஆயிரம் புத்தகங்கள் விற்பனைக்கான புத்தகங்கள் ஆகும்.
முதல் பருவ புத்தகங்கள்: 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முதல் பருவத்துக்கான புத்தகங்களும் இப்போது அச்சிடப்பட்டு வருகின்றன. இதிலும் பெரும்பாலான புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும் வருகிற 25-ஆம் தேதிக்குள் அச்சிடப்பட்டு விடும். மே 30-ஆம் தேதிக்குள் இவை அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சில்லறை விற்பனை எப்போது? பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் சில்லறை விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநில அரசிடம் கலந்தாலோசித்த பிறகு சில்லறை விற்பனைக்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment