உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்புக்கான
நுழைவுத்தேர்வு, ஜூன், 15ம் தேதி நடக்கிறது. அதற்கான, விண்ணப்பத்தை, அடுத்த
மாத இறுதிக்குள், அனுப்ப வேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி
நிறுவனத்தில், 2013 - 14ம் ஆண்டுக்கான, தமிழ் சுவடியியல் பட்டய
வகுப்புக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 15ல் நடக்க உள்ளது. இவ்வகுப்பில்,
சுவடிகளின் தோற்றம், வளர்ச்சி, பதிப்பு வரலாறு, யாப்பு, பாட்டியல்
ஆகியவற்றைப் பற்றி அறியவும், ஓலைச் சுவடிகளை படிக்கவும், படியெடுக்கவும்,
பதிப்பிக்கவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த வகுப்பில் சேர்ந்து, பயில விரும்பும் மாணவர்கள், அதற்கான
கடிதத்துடன், 100 ரூபாய் நுழைவுத் தேர்வு கட்டணத் director, International
institute of Tamil studies என்ற பெயரில், டி.டி., எடுத்து, "உலகத்தமிழ்
ஆராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம்,
தரமணி, சென்னை-113" என்ற முகவரிக்கு, அடுத்த மாதம், 30க்குள் அனுப்ப
வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை, www.ulagaththamizh.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
is it posible in DDE scheme.
ReplyDelete