அண்ணாமலை பல்கலைக்கழக விடைத்தாள் பண்டல்கள், சாலையில் கிடந்தது
தொடர்பாக, திருச்சி ரயில்வே அஞ்சல் துறை முதன்மை கண்காணிப்பாளர்,
விருத்தாசலத்தில் நேற்று, விசாரணை நடத்தினார்.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலை
கழகத் தேர்வு விடைத்தாள் பண்டல்கள் இரண்டு, சேத்தியாதோப்பு - எறும்பூர்
சாலையில் கண்டெடுக்கப்பட்டு, விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில்
ஒப்படைக்கப்பட்டன. அதேபோல், சேத்தியாத்தோப்பு போலீஸ் ஸ்டேஷனில், மற்றொரு
விடைத்தாள் பண்டல் ஒப்படைக்கப்பட்டது.
விருத்தாசலம் போலீசார் விசாரணையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்,
கடந்த, 21ம் தேதி நடந்த தேர்வு விடைத்தாள்கள், சென்னையிலிருந்து,
மலைக்கோட்டை எக்ஸ்பிரசில், ரயில்வே மெயில் சர்வீஸ் மூலம், விருத்தாசலம்
ஆர்.எம்.எஸ்., அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு வந்துள்ளதும்,
அங்கிருந்து, மாலை, 4:30 மணியளவில், லாரி மூலம், 640 விடைத்தாள் பண்டல்கள்,
சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும், அதில், இரண்டு பண்டல்கள்,
சாலையில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக, திருச்சி ரயில்வே அஞ்சல் துறை முதன்மைக் கண்காணிப்பாளர்
கணேசன், விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில்,நேற்று விசாரணை
நடத்தினார். சென்னையில் இருந்து ரயிலில் வந்த பண்டல்களின் எண்ணிக்கை,
சிதம்பரம் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிய பண்டல்களின் எண்ணிக்கை, தவறிய
பண்டல்கள் குறித்தும் விசாரித்தார்.
No comments:
Post a Comment