பிளஸ் 2 முடித்த, ஏழு லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில், புதிதாக
சேர்க்க, கல்லூரிகளிலேயே விண்ணப்பம் வழங்குமாறு, தமிழக தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, 18 வயது பூர்த்தியான
அனைவரும், வாக்காளர் அடையாள அட்டை பெற தகுதியுடையவர்கள். கடந்த சில
ஆண்டுகளாக, அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், தேர்தல் தனிப்பிரிவு
செயல்படுகிறது.
அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை பெறுதல், இந்திய குடியுரிமை பெற்றோர், வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பித்தல் போன்ற பணிகள், இங்கு நடக்கின்றன. இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், 7 லட்சத்து, 4,125 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு பெரும்பாலும், 17 வயது பூர்த்தியாகி இருக்கும் என்பதால், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, மாணவர்கள், புதிதாக சேரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிபல்கலைகளில், புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான படிவம் - 6 வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளஸ் 2 படிப்பு முடித்த மாணவர்கள், உயர்கல்விக்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வர். அவர்களில், 17 வயது பூர்த்தியானவர்களுக்கு, கல்லூரி மூலம் படிவம் - 6 வழங்கப்படும்.இப்பணிக்காக, கல்லூரியில் தனியாக ஒரு அலுவலர் நியமிக்கப்படுவர். 17 வயது பூர்த்தியாகாதோர், "அண்டர் ஏஜ்' லிஸ்டில் வைக்கப் படுவர். அவர்களுக்கு, 2014, ஜனவரி ஒன்றாம் தேதி, 18 வயது பூர்த்தியாகும் போது, புதிய வாக்காளர் அட்டைவழங்கப்படும்.
வெவ்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள், ஒரே கல்லூரியில் படித்தாலும், அவர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அவை சரிபார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும். இப்பணிகளுக்காக, தேர்தல் பிரிவும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து செயலாற்ற, அறிவுறுத்தப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment