கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 17ம் தேதி துவங்க உள்ளது.
நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப
வினியோகம் கடந்த 6ல் துவங்கியது. நேற்று மாலை வரை 9,760 விண்ணப்பங்கள்
விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4,863 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இக்கல்லூரியில், இரண்டு சுழற்சி முறைகளிலும் சேர்த்து 4,776
மாணவர்கள் படித்து வருகின்றனர். இருபது இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம்
1,319 மாணவர்கள் நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட உள்ளனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட்ட நாள் முதல் 10 வேலை நாட்கள் வரை மட்டுமே விண்ணப்பங்கள்
வினியோகிக்கப்படும். அதன் படி, வரும் ஜூன் 7ம் தேதி விண்ணப்பங்களை பெற்று
பதிவுசெய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் ஜோதிமணி கூறியதாவது: இதுவரை 4863
மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். வரும் 7ம் தேதி வரை
விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி நடக்கும். 8ம் தேதி முதல்
கலந்தாய்விற்கான அழைப்பு கடிதம் அனுப்பும் பணி துவங்கும்.
வரும் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ்
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொது
கலந்தாய்வும் நடக்கும். 7ம் தேதிக்கு பின் கிடைக்கும் விண்ணப்பங்கள்,
தாமதத்தின் காரணமாக கலந்தாய்விற்கு ஏற்று கொள்ள இயலாது. இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment