இந்த 2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின்
கீழ்வரும் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்.,
போன்ற படிப்புகளில் சேர்வதற்கான டேன்செட் நுழைவுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6
மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்றது.
இதில், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான தேர்வை
மட்டும், மொத்தம் 52,255 மாணவர்கள் எழுதினர். அவற்றில் எம்.பி.ஏ.,
படிப்பிற்கு மட்டும் 37,768 மாணவர்களும், எம்.சி.ஏ., படிப்பிற்கு மட்டும்
14,487 மாணவர்களும் எழுதினர். அதற்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம்
தற்போது வெளியிட்டுள்ளது.
டேன்செட் எழுதிய மாணவர்கள், தங்களின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள http://www.annauniv.edu/687--150/
என்ற வலைதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் சென்று தங்களின் பதிவு எண்
மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டால், முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment