பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், 26 ஆண்டுகளாக முதலிடம் பெற்று விருதுநகர்
மாவட்டம், கடந்த இரு ஆண்டுகளாக பின் தங்கி வருகிறது. இந்தாண்டு தேர்ச்சி
சதவீதத்தில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
அரசு பொதுத் தேர்வுகளான பிளஸ் 2
தேர்ச்சி சதவீதத்தில், விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பெற்று
வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து முதலிடம் பெற்ற விருதுநகர்,
கடந்த ஆண்டு 91.94 சதவீதம் பெற்று பின் தங்கியது. 93.68 சதவீதம் தேர்ச்சி
பெற்ற தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தில்
விருதுநகர் இருந்தது.
இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் ஐந்தாம் இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி பெற்றுள்ளது. இதன் மூலம், 26
ஆண்டு சாதனையை விருதுநகர் இழந்துள்ளது.
தேர்ச்சியில் முதலிடம் பெறும் விருதுநகரில், ஆசிரியர்களது சேவை
மனப்பான்மை அடிப்படையில், சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாட்களில் சிறப்பு
வகுப்புகள் நடத்தப்படும். திருப்புதல் தேர்வில் குறைந்த மதிப்பெண்
பெறுபவர்களை கண்டறிந்து, சிறப்பு பயிற்சி வழங்கப்படும். ஆசிரியர்
காலிப்பணியிடங்களில், மாற்றுப்பணிகளில் ஆசிரியர்கள் செயல்படுவர்.
ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர்கள், அதிகாரிகளிடையே கட்டுக்கோப்பு
இல்லாமல் போனது. இது போன்ற காரணங்களால், விருதுநகர் மாவட்ட தேர்ச்சி,
தொடர்ந்து பின் தங்கி வருகிறது.
No comments:
Post a Comment