காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிப்பது, சாத்தியப்படாத சூழலே
நிலவுகிறது.
அரசு பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, தமிழ் வழியில்
மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. தனியார் மெட்ரிக் பள்ளிகளை
ஒப்பிடும்போது, பெரும்பாலான அரசு பள்ளிகளில், போதுமான வகுப்பறை, குடிநீர்,
கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இருப்பது இல்லை.
ஆசிரியர் காலி பணியிடங்களும் அதிகமாக இருப்பதால், கல்வி கற்பிக்கும் பணி பாதிக்கப்படுகிறது.இன்றைய மாணவர்கள் பலரும் ஆங்கில வழி கல்வி
பயிலவே விரும்புகின்றனர். எதிர்காலம் கருதி, பெற்றோரும், மாணவர்களை, மெட்ரிக் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
பயிலவே விரும்புகின்றனர். எதிர்காலம் கருதி, பெற்றோரும், மாணவர்களை, மெட்ரிக் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், ஒன்று முதல் பத்தாம்
வகுப்பு வரை, சமச்சீர் கல்வித்திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
தொடர்ந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி
கல்வி செயல்படுத்தும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி, நகராட்சி, அரசு பள்ளிகள் என மொத்தம் 1,156
பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஒரு லட்சத்து 186 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசு உத்தரவையடுத்து, கடந்த 2011-12ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 97 பள்ளிகளில் துவங்க ஒப்புதல் கேட்டு, கல்வித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஒரு லட்சத்து 186 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசு உத்தரவையடுத்து, கடந்த 2011-12ம் கல்வியாண்டில் முதல்கட்டமாக 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 97 பள்ளிகளில் துவங்க ஒப்புதல் கேட்டு, கல்வித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளிகளில், 1,167 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்களுக்கு, 1,381 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடுநிலைப்பள்ளிகளில், 758 பணியிடங்களுக்கு, 745 பட்டதாரி ஆசிரியர்கள்
மட்டுமே உள்ளனர். மாவட்டம்தோறும் அரசு
பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவக்க உத்தரவிட்ட தமிழக அரசு, புதிய ஆசிரியர் நியமனம், கூடுதல் வகுப்பறை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆங்கில வழி கல்வி பள்ளி எண்ணிக்கையை உயர்த்த ஆர்வம் காட்டும்
கல்வித்துறை அதிகாரிகளும், புதிய ஆசிரியர்கள் நியமிக்க, அரசுக்கு, கோரிக்கை
விடாமலேயே உள்ளனர். காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், புதிய
ஆசிரியர்கள் நியமிக்காததால், திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆங்கில
வழிக்கல்வி பெயரளவுக்கே செயல்படுகிறது.
தமிழ் வழிக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழிக்கும் பாடம் நடத்துகின்றனர்.
கூடுதல் வகுப்பறைகள் இல்லாத தால், வராண்டாக்களிலும், ஒரே வகுப்பறையை பகுதியாக பிரித்தும், தமிழ், ஆங்கில வழிக்கல்வி மாணவர்களை ஒன்றாக அமர வைத்தும் பாடம் கற்பிக்கப்படுகிறது.
பெரும்பாலும், தமிழிலேயே பாடங்களை நடத்துவதால், ஆங்கில வழிக்கல்வி
மாணவர்களிடம், ஆங்கில மொழித்திறன் வளர வாய்ப்பு இல்லாத சூழல்
உள்ளது. கலந்தாய்வின் போது, வேறு மாவட்ட ஆசிரியர்கள், வருவர்; காலி
பணியிடம் நிரப்பப்பட்டு விடும் என்கின்றனர், கல்வித்துறை அதிகாரிகள்.
கலந்தாய்வில், திருப்பூரில் இருந்தும் அதிக ஆசிரியர்கள் வேறு
மாவட்டங்களுக்கு செல்வர் என்பதால், காலி பணியிடங்கள் மேலும் அதிகரிக்கவே
வாய்ப்புள்ளது. அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை துவங்கிய தமிழக அரசு,
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கூடுதல் வகுப்பறை கட்டிக்கொடுத்து,
ஆங்கில திறன்மிக்க புதிய ஆசிரியர்களை பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும்.
அப்போது தான், ஆங்கில வழிக்கல்வி துவக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும்.
No comments:
Post a Comment