"முப்பருவக் கல்வி முறைத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல், ஒன்பதாம்
வகுப்பு வரை, தமிழ்ப் பாடம் நீங்கலாக, இதர பாடங்களுக்கு, தனியார்
பதிப்பகங்கள் புத்தகங்களை அனுப்பலாம்" என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து
உள்ளது.
இதுதொடர்பான கல்வித் துறையின்
அறிவிப்பு: மாநில பொதுப் பள்ளிக் கல்வி வாரியத்தால் ஒப்புதல்
அளிக்கப்பட்டு, பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள்
பார்வைக்காக, http://www.dse.tn.gov.in என்ற இணையதளத்தில், 9ம் வகுப்பு, முதல் பருவப் பாடப் புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு, தமிழ்ப் பாடம் தவிர, இதர பாடங்களை, முப்பருவக்
கல்விமுறை அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு அனுமதி பெற
விரும்புவோர், புத்தகங்களின் இரு நகல்களை, "உறுப்பினர்-செயலர், மாநில
பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் மற்றும் பள்ளிக் கல்வி இணை இயக்குனர்
(இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6" என்ற முகவரிக்கு, நேரிலோ
அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
இம்மாதம், 24ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், புத்தகங்களை ஒப்படைக்க
வேண்டும். மேலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான புத்தகங்களுக்கு
ஒப்புதல் பெற விரும்புவோரும், விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலையைக் குறிப்பிட வேண்டும். பாடப்
புத்தகங்களுக்கு, ஒப்புதல் அளிப்பது, மாநிலக் கல்வி வாரியத்தின் இறுதி
முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு, பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment