எஸ்.ஆர்.எம்., பல்கலையில், ஜூன் 1ம் தேதி முதல், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு துவங்குகிறது.
எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து கூறியதாவது: பொறியியல்,
தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியலுக்கான, இளங்கலை
மற்றும் முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, ஏப்., 20,
21ல் நடைபெற்றது.
கடந்தாண்டு, 12 கோடி ரூபாய் உதவி தொகை, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தாண்டு, 11 புதிய பாட திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்; தமிழ்
பாடல்கள் இயற்றுவது பற்றிய பாடத் திட்டமும் இதில் உள்ளது. பல்கலை மாணவர்
பரிமாற்றம் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில், 90 பல்கலைக் கழகங்களுடன்
இணைந்து, இரட்டை பட்டம் பெறலாம்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையின் சேர்க்கை கலந்தாய்வுக்கு, 60 ஆயிரம் மாணவர்கள்
அழைக்கப்பட்டுள்ளனர்; கலந்தாய்வு, ஜூன் 1 முதல், ஜூன் 8ம் தேதி வரை
நடக்கவுள்ளது.
எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., கலந்தாய்வு, ஜூன் 9ம் தேதியும், சுகாதார
அறிவியல் திட்டங்கள் கலந்தாய்வு, ஜூன் 10ம் தேதியும், எம்.டெக்., சேர்க்கை
கலந்தாய்வு, ஜூன் 23ம் தேதியும் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment