காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான சதுரங்க போட்டி நேற்று துவங்கியது.
காரைக்கால் சதுரங்க கழகம் மற்றும் ஓ.என். ஜி.சி., சார்பில்
அகில இந்திய அளவிலான சதுரங்க போட்டி நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் நேற்று துவங்கியது. போட்டிகளை ஓ.என்.ஜி.சி., காவிரி அசட் மேலாளர்
ஹரிகோவிந்த் துவக்கி வைத்தார்.
போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டில்லி
உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 140 மாணவர்கள் கலந்து கொண்டனர். சதுரங்க
போட்டிகள் 10 சுற்றுகளாக நடக்கவுள்ளது. போட்டியின் நடுவர்களாக சென்னையைச்
சேர்ந்த ஸ்ரீவர்சன், புதுச்சேரி நடராஜன், அருள்மொழி ஆகியோர் கலந்து
கொண்டுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு வரும் 18ம் தேதி
பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
58 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment