அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் மங்களூர் ஒன்றியம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மா.பொடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மா.பொடையூர் பள்ளி அலுவலகம் ஆகிய இடங்களில் இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர், துப்புரவாளர், காவலர், தோட்டக்காரர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
இளநிலை உதவியாளர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று டாலி மற்றும் தமிழ் ஆங்கிலம் தட்டச்சு பெற்றவரும், நூலகர் பதவிக்கு சிஎல்ஐஎஸ் சான்றிதழ் பெற்றவரும், ஆய்வக உதவியாளர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆய்வகப் பொருட்களை கையாளும் அனுபவம் உள்ளவரும், அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரும், துப்புரவு பதவிக்கு எட்டாம் வகுப்பு படித்தவராகவும், காவலர் பதவிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
தோட்டக்காரர் பதவிக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்தவராகவும், தோட்டக்கலையில் முன் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அனைத்து பதவிக்கும் 2 அல்லது 3 ஆண்டுகள் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த நபர்கள் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பத்தின் மேலே பதவியை குறிப்பிட்டு சான்றிதழ்களின் நகல்களுடன் தலைமை ஆசிரியர், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மா.பொடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மா.பொடையூர், மங்களூர் ஒன்றியம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இத்தகவலை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment