பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) மற்றும், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு
சட்டப் படிப்புகளுக்கும், வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட
உள்ளன.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை,
திருச்சி, கோவை, நெல்லை ஆகிய ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள்
செயல்படுகின்றன. இதில், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்பும்,
பி.எல்., என்ற மூன்றாண்டு சட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள சட்ட பள்ளியில் நடத்தப்படும் பி.ஏ., - பி.எல்.,
(ஹானர்ஸ்) மற்றும், பி.ஏ., - பி.எல்., ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கும்,
வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. ஐந்தாண்டு பி.ஏ., -
பி.எல்., சட்டப் படிப்பிற்கு, 1,052 இடங்கள் உள்ளன. இதில் சேர, பிளஸ் 2
முடித்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment