பள்ளி மாணவர், "இளம் விஞ்ஞானி விருது" பெற தேசிய, "ரோபோ தொழில்நுட்பம்" போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.
pack
:
தொழிலாளர் கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், பட்டப் படிப்பு மற்றும்
பட்டயப் படிப்பில் சேர, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அடுத்த மாதம், 15ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாதிரி பள்ளிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம்
சேலம் மாவட்டத்தில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ்
செயல்பட்டு வந்த மாதிரிப்பள்ளிகள், 10ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத
தேர்ச்சி பெற்றதால், புதிதாக துவக்கப்பட்ட, ஒன்பது மாதிரிப்பள்ளிகளில் சேர,
மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி - தினமலர்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில் மோசடியைத்
தவிர்க்க, அரசு தற்போது விதித்துள்ள, கிடிக்கிப்பிடி உத்தரவால், பல பள்ளி
தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவக்கம்
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு துவங்கியது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற
உள்ளது. ஜூலை, 2ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
சட்டப் படிப்புக்கு ஜூலையில் கலந்தாய்வு
சட்ட படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம்
வாரத்தில் துவங்க உள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை,
செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு
இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
வி.ஏ.ஓ., ஆறாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
நிரம்பாமல் உள்ள, 46 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆறாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 9ம் தேதி நடக்கிறது.
மருத்துவ படிப்பு சென்டாக் கவுன்சிலிங் ஜூலை 6ல் துவக்கம்
மருத்துவ படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் வரும் ஜூலை 6ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடக்கிறது.
புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் கட்டணம் வெளியீடு
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.180 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு: ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 2013-14ம் ஆண்டில் 180 கோடி ரூபாய்
கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்யின்
ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர் தெரிவித்தார்.
மாற்றம் தரும் போக்குவரத்து பொறியியல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும்
வசதியான பயணத்தை ஏற்படுத்தி தரும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பவர்கள்
டிரான்ஸ்போர்ட்டேஷன் இன்ஜினியர்கள். இத்துறை சார்ந்த இளநிலை மற்றும்
முதுநிலை படிப்புகள் பல்வேறு கல்லூரிகளில் வழங்கப்படுகின்றன.
மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை பணிநீக்கம்
பழனி அருகே நெய்க்காரபட்டியிலுள்ள பள்ளியில்
மாணவியை பிரம்பால் தாக்கிய ஆசிரியையை பணி நீக்கம் செய்ய, மாவட்டக் கல்வி
அலுவலர் உத்தரவிட்டார்.
எம்.பி.ஏ.,க்கு தேர்வானோர் பட்டியல் வெளியீடு
எம்.பி.ஏ., பட்டப் படிப்பில் சேர தேர்வானோர் விவரம், சென்னை பல்கலைக்கழக
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்
ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி
முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம்
அறிவுறுத்தியுள்ளது.
கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்"
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா
பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன்
நிரம்பிவிட்டன.
எம்.பி.பி.எஸ்., இடம் கோரி மாற்று திறனாளி மாணவி மனு
எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் ஒதுக்கக் கோரி, மாற்றுத் திறனாளி மாணவி,
சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்க
உத்தரவிட்டு, விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.
கிராமப்புற சேவை: மருத்துவ மாணவர் எதிர்ப்பு
"கிராமங்களில் பணிபுரியும் மருத்துவருக்கு, 50 சதவீதம் கூடுதல் ஊதியம்
தரப்படும் என்ற அறிவிப்பை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்" என சமூக
சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு எழுதினால்தான் மாநில அதிகாரிகள் இனி ஐ.ஏ.எஸ்.,
மாநில அளவிலான அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவி உயர்வு பெற, இனி
தேர்வு எழுத வேண்டும் என, மத்திய அரசு தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,)
அறிவித்துள்ளது.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு அரசு பரிசு எப்போது?
பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெற்ற
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு, அரசு பரிசுத் தொகை, இன்று
வரை வழங்கப்படவில்லை.
இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி., கிடுக்கிப்பிடி
உரிய அங்கீகாரமற்ற கல்வி மையங்களில் சேர வேண்டாமென, மாணவர்களுக்கு
பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், இதுதொடர்பாக
செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
அரசு இசைப்பள்ளியில் ஊக்கத்தொகையுடன் இசைப்பயிற்சி
"அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின்,
மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை
தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை...
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும்
முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில்
விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும்
உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது
கேள்விக்குறியாகிவிட்டது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலை நேரம் அதிகரிப்பு
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில், டிகிரி
முடிக்கும் பலர் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளை எழுதுவதில் ஆர்வம்
காட்டுகின்றனர். குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில் திருக்குறள், இலக்கணம்,
இலக்கியம், நூலாசிரியர்கள் என, தமிழ் பாடத்தில் இருந்து 80 வினாக்கள் வரை
கேட்கப்படுகிறது. இதனால், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கருதுவோர்,
பட்டப்படிப்பில் தமிழை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கலைக் கல்லூரிகளில், கடந்த ஆண்டுகளை விட, இவ்வாண்டு தமிழ் இலக்கிய
பாடப்பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும்
நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட 5 முதல் 8 மடங்கு விண்ணப்பங்கள்
வந்துள்ளன.
உதவி தமிழ் போராசிரியர் இளவரசன் கூறும் போது, "முன்பு தமிழ்பாட பிரிவில்
யாரும் சேரமாட்டார்கள்.வேறு பாடப்பிரிவு கிடைக்காதவர்கள் தான் தமிழில்
சேருவர். தற்போது, போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
போட்டி தேர்வில் தமிழுக்கு முக்கியம் இருப்பதால், தமிழ்பாடத்தில் சேர
ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.
வசூலாகாத கல்வி கடன்கள்: கனரா வங்கி புதிய திட்டம்
வசூலாகாத கல்விக் கடன்களை திரும்பப் பெறுவதற்கு, கடன் சீர்திருத்த
திட்டத்தை, கனரா வங்கி செயல்படுத்த உள்ளது. இவ்வங்கியின் வசூலாகாத கல்விக்
கடன், 9 சதவீதமாக உள்ளது. இதை, 2 சதவீதமாகக் குறைக்க இவ்வங்கி
திட்டமிட்டுள்ளது.
போட்டித் தேர்வில் முக்கியத்துவம்: கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கு "மவுசு"
டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
அரசாணை பிறப்பித்தும் உதவி பேராசிரியர் நியமனம் இல்லை
அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஓராண்டுக்கு முன் அரசாணை வெளியிட்டும்,
பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
பட்டதாரிகளில் 50% பேர் வேலைக்கு தகுதியற்றவர்கள்: ஆய்வு
இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள்
செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி,
தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பள்ளிகளின் நேரம் மாற்றம்
மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பள்ளிகளின்
துவக்க நேரத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அன்சுல்
மிஸ்ரா அறிவித்துள்ளார்.
தேர்வுக்கு படித்தல் - ஒரு திட்டமிட்ட கலை
மூன்று மணி நேரம்தான். அதற்குள் கேட்பவற்றை சிறப்பாக எழுதி முடித்துவிட
வேண்டும். புத்தகத்தில் உள்ளதையே எழுத வேண்டும். முழு மதிப்பெண்ணை
எடுத்தால்தான், நினைத்த மேற்படிப்பை படிக்க முடியும்.
மாணவர்கள் கரை சேர, ஆற்றில் நீந்தி பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
தன்னிடம் படிக்கும் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற, கேரளாவை சேர்ந்த
ஒரு வகுப்பாசிரியர், கரைபுரண்டோடும் ஆற்று தண்ணீருடன் தினமும் போரிட்டு
தோற்கடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
யு.ஜி.சி., துணைத் தலைவராக சென்னை பல்கலை பேராசிரியர் நியமனம்
பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணை தலைவராக, சென்னை
பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் தேவராஜ், 59 நியமிக்கப்
பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தற்காலிக பொறுப்பு
வகித்துள்ளார்.
சட்டப் படிப்புக்கு 9,000 விண்ணப்பம் விற்பனை: ஜூலை 10 கடைசித் தேதி
சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 9 ஆயிரத்தை தாண்டியது.
மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பம்
வினியோகிக்கப்படும்.
தொழிற்கல்வி பிரிவு பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 1ல் துவக்கம்
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான, பொறியியல் கலந்தாய்வு, ஜூலை, 1ம்
தேதி துவங்கி, 12 வரை நடக்கிறது. அண்ணா பல்கலையில், தற்போது பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
அண்ணாமலைப் பல்கலையில் மருத்துவ படிப்பு: 28ல் கலந்தாய்வு
அண்ணாமலைப் பல்கலையில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு, வரும் 28ம்
தேதி கலந்தாய்வு துவங்குகிறது. இன்ஜினியரிங் படிப்புக்கு, ஜூலை 3ம் தேதி
துவங்கி, 7ம் தேதி வரையிலும், வேளாண் மற்றும் தோட்டக் கலைத் துறை
படிப்புக்கு, ஜூலை 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.
கவனிக்க வேண்டிய காப்புரிமைப் படிப்பு
மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை
பெறுவது அத்தியாவசியம். காப்புரிமைச் சட்டம் எனப்படும் பேடன்ட் ரைட் என்பது
ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடியது.
ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்
"பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி
மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பார்டென்டர் பணி - சந்தோஷமும், சம்பாத்தியமும் பெறலாம்!
பானங்களை கலத்தல் மற்றும் பொருத்திப் பார்த்தல் ஆகிய கலையில் ஆர்வம்
கொண்டிருந்து, இரவில் விழித்திருந்து பணி செய்வதை ஒருவர் விரும்பினால்,
பார்டென்டர் பணிக்கு அவர் பொருத்தமானவர்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்
இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை
பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர்
தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திட்டக்குழு அனுமதி முறையை ரத்துசெய்ய கோரிக்கை
"பள்ளி கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி தேவை, என்ற உத்தரவை
ரத்து செய்ய வேண்டும்" என, நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க
நிர்வாகிகள் கூறினர்.
ஆங்கிலவழி புத்தகங்கள் வழங்கப்படாததால், தமிழ்வழி புத்தகங்கள் மூலமே பாடம்
மதுரையில், தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான
புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால், தமிழ்வழிக் கல்வி புத்தகங்கள் மூலம்
பாடம் நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில், இரண்டு மற்றும்
மூன்றாமிடம் பெற்ற, மாணவ, மாணவியர், முதல்வரிடம் பரிசு பெற முடியாததால்,
கடும் ஏமாற்றமடைந்தனர். முதல்வர் பரிசு வழங்குவார் எனக்கூறி, அதிகாரிகள்
நாள் முழுக்க காக்க வைத்து, திருப்பி அனுப்பியதால், பெற்றோர் கடும்
அதிருப்தி அடைந்தனர்.
நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்...
சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான
ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய
பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில்
அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு
இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, காரைக்குடியில் நடந்தது. 3,837 பேர் தேர்வெழுதினர்.
குரூப்-4 தேர்வு - புரோக்கர்கள் தலையீடு இருந்தால் வெளிப்படையாக புகார் தரலாம்
"குரூப்-4 தேர்வில், புரோக்கர்கள் தலையீடு இருந்தால், தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தில், வெளிப்படையாக புகார் தரலாம். புரோக்கர்கள்
சிறையில் தள்ளப்படுவர்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்,
நவநீதகிருஷ்ணன் கூறினார்.
ஜுலை 4ம் வாரத்தில் கால்நடை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு
கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, ஜூலை நான்காம் வாரத்தில் துவங்குகிறது.
பணி வாய்ப்புகள் அதிகமாக இருக்குமிடம்
புதிதாக தங்களது பட்டப்படிப்புகளை முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள்
அதிகமாக இருக்குமிடம் கால் சென்டர்கள் தான். இந்தியப் பொருளாதாரம்
தாராளமயமாக்கப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது பல பணிகளை
அவுட்சோர்சிங் செய்து இந்தியாவில் கடை விரித்தன.
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்
ஆசியாவிலேயே முதல் வானிலை கல்வி நிறுவனமாக ஏற்படுத்தப்பட்டது தான்
வான்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனம்.
குழப்பத்தை குழி தோண்டி புதையுங்கள்...
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுப்பது,
எந்தப் படிப்பை படித்தால் நல்லது, எந்த படிப்பு எளிதாக இருக்கும், எந்த
படிப்பை படித்தால் வேலை கிடைக்கும், அதிக சம்பளம் தரும் படிப்பு எது என
பல்வேறு கேள்விகள் மண்டையை குடையும்.
கல்லூரிகளில் முடங்கும் நாட்டு நலப்பணி திட்டம்
அரசு வழங்கும் நிதி உரிய காலத்தில் கிடைக்காததால், கல்லூரிகளில், நாட்டு
நலப்பணி திட்டத்தை செயலாக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
பி.இ., மாணவர் சேர்க்கை: என்.ஆர்.ஐ., இடங்கள் குறைப்பா?
பி.இ., படிப்பில், வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கான
(என்.ஆர்.ஐ.,) இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று இப்பிரிவின்
கீழ், கலந்தாய்விற்கு வந்திருந்த பலர், அண்ணா பல்கலை அலுவலர்களுடன்
வாக்குவாதம் செய்தனர்.
பி.ஏ., வரலாறு, சுற்றுலா பயின்றவர்கள் டி.இ.டி. தேர்வு எழுதுவதில் சிக்கல்
அரசு ஆணை இல்லாததால், பி.ஏ.வரலாறு மற்றும் சுற்றுலா தொழிற்கல்வி பட்டம்
பெற்று, பி.எட்., முடித்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத முடியாமல்
அவதிப்படுகின்றனர்.
"இனி பள்ளிகளில் புத்தகங்கள் இருக்காது"
தமிழகத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள், தங்களது எடையை விட,
அதிக எடையுள்ள புத்தக பையை சுமந்து செல்கின்றனர். ஆனால் கோவாவில் அடுத்த
மாதத்தில் இருந்து இப்படிப்பட்ட குழந்தைகளை பார்க்க முடியாது. ஏனெனில்
ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகங்களுக்கு பதிலாக,
"இ-நோட்புக" வழங்கப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு எப்போது?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வின்
முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும்
நிரப்பப்பட்டுள்ளன. நடப்பு, 2013 -14ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்.,
மாணவர் சேர்க்கைக்கு, இம்மாதம், 18ம் தேதி துவங்கிய முதல்கட்ட கலந்தாய்வு,
நேற்றுடன் முடிவடைந்தது.
பயன்தரும் நூலகம் நீதிமன்றமாக மாற்றம்: வாசகர்கள் தவிப்பு
"ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது, ஒரு
சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது" என்பார்கள். ஆனால், இங்கே ஒரு நூலகத்தை
மூடி, குற்றவாளிகளை விசாரிக்கும் நீதிமன்றமாக மாற்றியதால், பல ஆயிரம்
வாசகர்கள் தவிக்கின்றனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் புதிய மருத்துவ படிப்புகள்
சென்னை மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் நல மருத்துவம் தொடர்பான, புதிய மருத்துவப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.
தொடர்ந்து சறுக்கும் இந்திய பல்கலைக்கழங்கள்
இங்கிலாந்தை சேர்ந்த க்யூ.எஸ். நிறுவனம், சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு நடத்தி ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.
கலந்துரையாடல் நிகழ்ச்சி: பெற்றோரின் நோக்கும், பிள்ளைகளின் போக்கும்
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்னில் "பெற்றோரின் நோக்கும்,
பிள்ளைகளின் போக்கும்" என்ற தலைப்பில் ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையம்
ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஆஸ்திரேலிய தமிழ்க்
கலாசாலையின் கேரம்டவுன்ஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பொறியியல் கல்லூரிகள் தேர்ச்சி விவரம்.... மாணவர்கள் ஏமாற்றம்
சென்னை, ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், 2011-12ம்
ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, அண்ணா பல்கலை, நேற்று, தன்
இணையதளத்தில் வெளியிட்டது. தர வரிசைப்படி, கல்லூரிகளின் பட்டியலை
வெளியிடாமல், ஒவ்வொரு கல்லூரியைப் பற்றியும், தனித்தனியே, மாணவர்கள்
தெரிந்து கொள்ளும் வகையில், பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள்
மத்தியில், ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பி.இ., சேர்க்கை: 5,121 மாற்றுத்திறனாளி இடங்களில் 213 மட்டுமே ஒதுக்கீடு
பொறியியல் சேர்க்கையில், மாற்றுத் திறனாளிகளுக்கு, 5,121 இடங்கள்
இருந்தும், வெறும், 213 இடங்கள் மட்டுமே நிரம்பின. மீதமுள்ள இடங்கள்,
பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டன.
பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளிகளை மூட முயற்சியா?
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, 10க்கும்
மேற்பட்ட சிறப்பு பள்ளிகளை மூடுவதற்கான, ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக,
பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்
கோடை விடுமுறைக்கு பின், கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில்,
மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து ஆசிரியர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
படித்த இளைஞர்கள் தொழில் துவங்கிட தொழில் மையத்தில் விண்ணப்பிக்க அறிவுரை
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்
திட்டத்தில் படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட
ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் இல்லாத ஆதிதிராவிட பள்ளிகள்
ஆதிதிராவிட நல துவக்கப் பள்ளிகளில் 15 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் ஓராசிரியர் பள்ளிகள்
"ஓராசிரியர் பள்ளிகளில் கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய
பாடங்கள் மட்டுமின்றி, ஒழுக்க நெறிமுறைகளும் கற்று தரப்படுகிறது" என,
முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் கூறினார்.
உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி ஆசிரியர்களுக்கு உண்டு
"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி
ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்
பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி
அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.
பொறியியல் கல்லூரிகளின் துண்டு பிரசுரங்கள்: வழக்கை முடித்து வைத்தது ஐகோர்ட்
கவுன்சிலிங் நடைபெறும் போது எந்த விளம்பரங்களையும்
கல்லூரிகள் வெளியிடக் கூடாது என, தடைகோரிய மனுவை சென்னை ஐகோர்ட் முடித்து
வைத்துள்ளது.
ஐ.ஐ.டி. அறிமுகப்படுத்தும் எம்.எஸ்சி. காக்னிட்டிவ் சயின்ஸ்
இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் டெக்னாலஜி - காந்திநகர் புதிய முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயன் தரும் பயோ கெமிஸ்ட்ரி படிப்பு
பயோ கெமிஸ்ட்ரி என்பது, உயிரிகளின் உடலில் நடைபெறும் வேதிச் செயல்பாடு,
மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒரு துறை. செல்களின் அடிப்படைக்
கட்டமைப்புகளான, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நியூக்ளிக் அமிலம்,
இதர மூலக்கூறுகளையும் அவற்றின் வேதியியல் பண்புகளையும் ஆய்வு செய்கிறது.
ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் வலியுறுத்தாமல் பல்கலை இணைப்புக்கு பரிசீலிக்க உத்தரவு
"அண்ணா பல்கலையின் இணைப்பு பெற, ஏ.ஐ.சி.டி.இ.,யின் ஒப்புதல் உத்தரவை
வலியுறுத்தாமல், தனியார் பொறியியல் கல்லூரியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க
வேண்டும்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வராதீங்க... - அண்ணா பல்கலை திடீர் எஸ்.எம்.எஸ்.
பி.இ., சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவின் கீழ், நேற்று முன்தினம்,
420 இடங்கள் நிரம்பிய நிலையில், நேற்று காலை, "விளையாட்டுப் பிரிவின் கீழ்
விண்ணப்பித்த மாணவர்கள், கலந்தாய்வுக்கு வர வேண்டாம்" என அண்ணா பல்கலை,
எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் அனுப்பியது.
வளர்ந்துவரும் ஏவியேஷன் துறை - தேவைப்படும் சிறப்பு படிப்புகள்
வான்வழி தொழில்நுட்பங்கள் வணிகமயமாதலோடு கூடிய விமானப் போக்குவரத்து
துறையில் ஏற்பட்டு வரும் அபரிமித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆயிரக்கணக்கான
பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
மாற்று திறனாளிகளுக்கான எம்.பி.பி.எஸ்., இடங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா?
மாற்றுத் திறனாளிகளுக்கான, எம்.பி.பி.எஸ்., இடங்களை, மருத்துவக் கல்வி
இயக்ககம், முறைகேடாக பயன்படுத்தி வருகிறது என தமிழ்நாடு மாற்றுத்
திறனாளிகள் சங்கங்களுக்கான கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை
"அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு
பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
சான்றிதழ் திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகள்: கல்வித்துறை எச்சரிக்கை
படிப்பை தொடர முடியாத மாணவர்களின் சான்றிதழ் மற்றும் கட்டணத் தொகையை
சில கல்லூரிகள் திருப்பித்தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது; அதேசமயம்,
புகாரின் அடிப்படையில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என
கல்வித்துறை எச்சரித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 20ம் தேதி திறப்பு
கோடை விடுமுறை முடிந்து, நாளை (20ம் தேதி) கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஜூலை, முதல்
வாரத்தில் வகுப்புகள் துவங்குகின்றன.
எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை ?
இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர்
தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி
போட்டுள்ளன. ஏற்கெனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள்
அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல்
காணாமல் போய்விட்டன. உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம்.
பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் 20ம் தேதி வெளியாக வாய்ப்பு
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல், 20ம் தேதி (நாளை) மாலைக்குள்
வெளியாக வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விளையாட்டு பிரிவு கலந்தாய்வு : 494 இடங்கள் நிரம்பின
பி.இ., விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வில், 494 இடங்கள் நிரம்பின.
விளையாட்டுப் பிரிவில், 500 இடங்கள் உள்ளன. இதை நிரப்ப, நேற்று
முன்தினம் நடந்த கலந்தாய்வில், 420 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 80 இடங்களை
நிரப்ப, இரண்டாவது நாளாக நேற்று, அண்ணா பல்கலை வளாகத்தில், கலந்தாய்வு
நடந்தது. இதில், 74 இடங்கள் நிரம்பின. ஆறு இடங்கள் நிரம்பவில்லை.
முதல் நாளில் ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
நேற்று ஒரே நாளில், ஒரு லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை
ஆகியுள்ளன. கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய
மாவட்டங்களில், அதிகளவில், விண்ணப்பங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது.
பள்ளிகளில் இருந்து, புள்ளி விவரங்கள் பெற வேண்டியிருப்பதால், இன்று தான்
விவரம் கிடைக்கும் என, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களில், 120 பேரின் தரவரிசை மாறியுள்ளதாக, திருத்திய தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல் வெளியாவதில் கால தாமதம்
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியாவதில், கால தாமதம்
ஏற்பட்டுள்ளது. எனினும், இன்றோ அல்லது நாளையோ, பட்டியல் வெளியாகலாம் எனவும்
கூறப்படுகிறது.
அண்ணாமலை பல்கலை தரவரிசைப் பட்டியல் எப்போது?
அண்ணாமலைப் பல்கலையில் சேர , தர வரிசைப்பட்டியல், இந்த வார இறுதியில் வெளியிடப்படுகிறது.
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை: விண்ணப்பங்கள் விற்பனை சரிவு
பி.இ.,இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, இதுவரை, 26 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.
தமிழகத்தில் 44 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி
மாநிலம் முழுவதும் 44 மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 59க்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்கள், காலியாக உள்ளன.
பிளஸ் 2 உடனடி தேர்வு 19ம் தேதி துவக்கம்
பிளஸ் 2 சிறப்பு உடனடி தேர்வு நாளை (19ம் தேதி) துவங்க உள்ள நிலையில்,
கோவை வருவாய் மாவட்டத்தில் ஆறு மையங்களில் 2,131 மாணவர்கள் பங்கேற்க
உள்ளனர்.
பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்
கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இன்ஜினீயரிங் கவுன்சிலிங் A to Z எளிமையான வழிகாட்டி!
* வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும்
மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில்
கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ;இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு
தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர்நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி
பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் தனது அமைச்சரவையை மாற்றியுள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் மழலையர் பள்ளிகள்: கண்காணிக்குமா அரசு?
அங்கீகாரம் பெறாத மழலையர் பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதிக
கட்டணம் வசூலிக்கும், "கிண்டர் கார்டன்" (மழலையர்) பள்ளிகள் கண்காணிப்படுமா
என்ற கேள்வி எழுந்துள்ளது.
இக்னோ பல்கலை விண்ணப்ப தேதி நீட்டிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமான, இக்னோவில்
வழங்கப்படும், இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயம், சான்றிதழ்
படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
படித்த மாணவர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மோசடி
கோவையில் படித்தவர்களை குறிவைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில், போலி
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள், புற்றீசல் போல் பெருகி வருகின்றன.
போலீசார் கண்காணித்து, இவற்றுக்கு கடிவாளம் போடாவிட்டால், அப்பாவி மக்கள்
பலரும் ஏமாற்றப்படுவர்.
முப்பருவ கல்வி முறைக்கு நோட்ஸ்: பறிபோகும் கற்பனை திறன்
பள்ளி பாடங்களுக்கு நோட்ஸ்கள் வரத் துவங்கியதால் ஆசிரியர், மாணவர்களின் கற்பனை திறன் குறைந்து வருகிறது.
டி.இ.டி., தகுதித் தேர்வு: விண்ணப்பம் விற்பனை தொடக்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், இன்று தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை: துணி உற்பத்திக்கு உத்தரவு
அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, சீருடை வழங்க, 6.52 கோடி மீட்டர் துணி
தயாரிக்க, விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு, உத்தரவு வழங்கப்பட்டு
உள்ளது.
வேலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:
1 அரசு மேல்நிலைப்பள்ளி, விருபாட்சிபுரம்
2 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி
3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈவேரே,வேலுhர்
4 அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலுhர்
5 அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி
6 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊசூர்
2 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலப்பாடி
3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈவேரே,வேலுhர்
4 அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலுhர்
5 அரசு மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி
6 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊசூர்
சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோக இடங்கள்:
1. அரசு மதரசா ஐ ஆசாம் மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலை, சென்னை-2.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, (புதூர்) மேற்கு மாம்பலம், சென்னை-83.
3. பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை-24.
பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல்: நாளை காலை வெளியீடு
ஐகோர்ட் உத்தரவுப்படி, பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா
பல்கலை, நாளை (17ம் தேதி) காலை, இணையதளத்தில் வெளியிடுகிறது. எனினும்,
இதனால், மாணவர்களுக்கு, பெரிய அளவில் எவ்வித பலனும் கிடைக்காது என, பல்கலை
ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ படிப்பு: பொது பிரிவில் தொடரும் பி.சி., பிரிவினரின் ஆதிக்கம்
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலில்,
முதல், 100 இடங்களில், 69 இடங்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.,)
பிடித்துள்ளனர். அதேபோல், முதல், 100 இடங்களில், 47 மாணவியர் இடம்
பெற்றுள்ளனர்.
முதுநிலை மருத்துவ படிப்பு: கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, கலந்தாய்வு கால அட்டவணை, நேற்று
வெளியிடப்பட்டது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ
படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை
தொடர்ந்து, எம்.டி., - எம்.எஸ்., -எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ
படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகளும், சுகாதார துறை இணையத்தில், நேற்று
வெளியிடப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறதா தேர்வுத்துறை?
நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்,
குளறுபடிக்கு மேல் குளறுபடி நடந்துள்ளது. வினாத் தாள்களில் கேள்விக்கு
ஏற்றாற்போல் விடையளிக்க இணைப்புகள் இல்லை. விடைத் தாள்களை தேர்வு
மையத்திலிருந்து, திருத்தும் மையங்களுக்கு அனுப்பியபோது காணாமல் போனது,
சேதமடைந்தது என, பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.
எம்.ஜி.ஆர்., திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஜூலை 5 வரை நீட்டிப்பு
எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி
நிறுவனத்தில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு, அடுத்த
மாதம், 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியீடு
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-4 கலந்தாய்வு: 100 பேருக்கு வேலை
குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்ற 100 பேருக்கு, நேற்று கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணையை, டி.என்.பி.எஸ்.சி., வழங்கியது.
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர விண்ணப்பங்கள் விற்பனை
அரசு ஐ.டி.ஐ.,க்களில் சேர, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வினியோகப்பட்டு வருகின்றன. சென்னை, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர்
உள்ளிட்ட, 32 மாவட்டங்களில், 62 தொழிற் பயிற்சி மையங்கள் உள்ளன.
சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மாணவர்கள் கையில் உள்ளது: அப்துல் கலாம்
"இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள். அவர்கள் கையில்தான்
சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் உள்ளது" என, அண்ணா பல்கலை கழகத்தில்
நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அப்துல்கலாம் பேசினார்.
31 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி: மாணவர் சேர்க்கை பாதிப்பு
தமிழகத்தில், 31 அரசு கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக
உள்ளதால், நிர்வாக பணிகள் முடங்கியுள்ளதோடு, மாணவர் சேர்க்கையிலும்
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒரு கோடி புத்தகங்கள் தயார்
"வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும்,
ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என
பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் 3 தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை சோதனை
பிளஸ் 1 வகுப்பு சேர்க்கைக்கு அதிகப்படியான கட்டணம்
வசூலிக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து நாமக்கல்லிலுள்ள மூன்று
பிரபல தனியார் பள்ளிகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை
திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்லூரிகள்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை
"உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள்
மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்
எச்சரித்துள்ளார்.
பொறியியல், மருத்துவத்திற்கான கட்-ஆப் மதிப்பெண்களில் குளறுபடி
பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான, கட்-ஆப் மதிப்பெண் பட்டியல்,
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், 4,000த்திற்கும் மேற்பட்ட
மாணவர்களின், கட்-ஆப் மதிப்பெண்கள், மாறியுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு,
பெரும்பாலான மாணவர்கள் விண்ணப்பிக்காத போதும், அவர்களுடைய விடைத்தாள்களை,
தேர்வுத்துறை, மறு மதிப்பீடு செய்ததில், ஏராளமானோருக்கு, மதிப்பெண்கள்
குறைந்துள்ளன.
மதுரையில் தினமலர் டி.இ.டி., தேர்வு பயிற்சி முகாம்
கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.இ.டி., தேர்வு பயிற்சி
முகாம், தினமலர் சார்பில் மதுரையில் நாளை (ஜூன் 15) நடக்கிறது.
திருவள்ளூரில் 19 மழலையர், தொடக்கப் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து
உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 19 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள்
கண்டறியப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதா.... விவரம் கேட்கும் பள்ளிக் கல்வித்துறை
தமிழகம் முழுவுதும் பள்ளிகள் திறந்த நாளில், பாடப்புத்தகங்கள்
வழங்கப்பட்ட விபரங்களை, பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
பாடப்புத்தகங்கள் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்காத
அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.
வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டிற்கான
இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு: 19ம் தேதி கலந்தாய்வு
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல்,
நேற்று வெளியிடப்பட்டது. இதில், ஏழு பேர், 200க்கு, 200 மதிப்பெண் எடுத்து
சாதித்துள்ளனர். இவர்களில், நான்கு பேர் மாணவர்கள். மாணவர் சேர்க்கை பொது
கலந்தாய்வு வரும், 19ம் தேதி துவங்குகிறது.
அரசு அறிவித்துள்ள வசதிகளுடன் இல்லை அரசு விடுதிகள்: முதல்வர் கருணை பார்வை விழுமா?
கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம், 20ல் கல்லூரி விடுதிகள் மீண்டும்
திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழகத்தில், செயல்படும் அரசு நல
விடுதிகளில், அரசு அறிவித்துள்ள சலுகைகளில், பெரும்பாலானவை, மாணவர்களுக்கு,
இதுவரை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்கல்வியாண்டிலாவது, திட்டங்களை முறைப்படி அமல்படுத்தினால், மாணவர்கள்,
கல்வித்தரம் மேம்பட வாய்ப்புண்டு.
உணவு தொடர்பான துறைகளில் ஆர்வமா?
உணவு பற்றிய படிப்பை ஒரு சிறந்த ஆர்வமூட்டும் படிப்பாக கருதும்
மாணவர்களுக்கு, அத்தொழில்துறையில், பல அற்புதமான வாய்ப்புகள்
காத்துக்கிடக்கின்றன.
இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம்
1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
பி.இ. கட்-ஆப்: 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை சரிவு
"கடந்த ஆண்டு, கட்-ஆப் 200க்கு, 200 மதிப்பெண்களை, 32 மாணவர்கள்
பெற்றனர். இந்த ஆண்டு, 12 மாணவர்கள் மட்டுமே, 200க்கு, 200 மதிப்பெண்களை
பெற்றுள்ளனர்" என பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பு: 21ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல், நேற்று மாலை வெளியிடப்பட்டது.
பொறியியல் சேரும் மாணவர்கள், இ.சி.இ., - எம்.இ., பாடப்பிரிவுகளை தேர்வு
செய்ய, ஆர்வம் தெரிவித்துள்ளனர். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 21ம்
தேதி துவங்குகிறது.
மெர்ச்சன்ட் நேவி
மெர்ச்சன்ட் நேவி என்பது லட்சக்கணக்கான டன் கொள்ளவுகளைக் கொண்ட
டேங்கர்கள், கார்கோ மற்றும் பயணிகள் கப்பல்களைக் குறிக்கிறது. கப்பற்படை
என்பது ராணுவத்தோடு தொடர்புடையது. ஆனால் மெர்ச்சன்ட் நேவி என்பது வணிக
ரீதியாக நடத்தப்படும் கப்பல் போக்குவரத்தைக் குறிக்கிறது. மெர்ச்சன்ட்
நேவியை நடத்தும் நிறுவனங்கள் திறமை வாய்ந்த கப்பல் பணியாளர்களை வேலைக்கு
வைத்துக் கொள்கின்றன.
ஆரம்ப பள்ளி இடை நிற்றலை தடுக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு
பெண் குழந்தைகளின், பள்ளி இடை நிற்றலை தடுக்கும் விதமாக, 14 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட,
இந்தாண்டு ஒதுக்கீடு அதிகம்.
இந்திய தேர்வை எழுதினாரா ஒபாமா?
எஸ்.எஸ்.சி., எனப்படும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு அனுமதி
சீட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படம் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு
ஏற்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும் பணி முடியவில்லை
பள்ளிகள் திறந்த நிலையிலும், தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம்
நிர்ணயிக்கும் பணி முடியவில்லை. இதனால், நடப்பு கல்வியாண்டில், கட்டணம்
வசூலிப்பதில், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு: இலவச பஸ் பாஸ் விரைவில் கிடைக்குமா?
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இலவச, பஸ் பாஸ்
வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், பள்ளி கல்வித் துறையும், போக்குவரத்து துறையினரும்
விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்
வயர்லெஸ் சாதனங்களான மொபைல் போன், ரேடியோ போன்றவற்றை பயன்படுத்த தேவையான
சமிக்ஞைகளை (சிக்னல்கள்) உருவாக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளை
கையாள்பவர்களே ரேடியோ பிரீக்வென்சி இன்ஜினியர்கள். சுருக்கமாக "ஆர்.எப்.
இன்ஜினியர்கள்" என்று அழைப்படுகிறார்கள்.
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வின் ஆன்ஸர்-கீ வெளியீடு
நாட்டிலுள்ள ஐ.ஐ.டி.,கள் மற்றும் தன்பாத்திலுள்ள
ஐ.எஸ்.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, கடந்த 2ம் தேதி(ஜுன்)
நடத்தப்பட்ட ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு) தேர்வின்(தாள் 1 மற்றும் தாள் 2) Answer
Key, பிராந்திய ஐ.ஐ.டி.,களின் ஜே.இ.இ., இணையதளங்களில், ஜுன் 11ம் தேதி
வெளியிடப்படுகிறது.
மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம்
மத்திய அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி கவுன்சிலின் முக்கிய
ஆய்வகங்களுள் ஒன்றான, மத்திய அறிவியல் உபகரணங்கள் கல்வி நிறுவனம் 1959ம்
ஆண்டு தொடங்கப்பட்டு சண்டிகரில் இயங்கி வருகிறது.
பள்ளியில் சேர்க்க மறுப்பு: பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்
சோமனூர், கருகம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி, 39; விசைத்தறி
தொழிலாளி. இவரது மனைவி விஜயா, 34, இவர்களுக்கு பிரவீன் சந்தர், 8, என்ற
மகனும், தீப்தி 5, என்ற மகளும் உள்ளனர். மகன், சாமளாபுரத்தில் உள்ள
பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.
அரசு தொடக்கப் பள்ளி அமைக்கக் கோரி வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்
கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியில்
அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு நிதி உதவிப்
பெறும் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
சாணாபுத்தூரில் அரசு நிதி உதவிப்பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1865-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சாணாபுத்தூரில் அரசு நிதி உதவிப்பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1865-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஹெச்.எம்.,க்கு ஆதரவாக பள்ளியை புறக்கணிக்கும் பெற்றோர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு
ஆதரவு தெரிவித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், பெற்றோர்
புறக்கணித்தனர்.
பள்ளிகள் திறப்பு எதிரொலி: வேன் கட்டணம் உயர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று அனைத்துப் பள்ளிகளும்
திறக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர்களில், பள்ளி வேன் கட்டணம்,
தூரத்திற்கு தகுந்தாற்போல், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை
உயர்த்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் இடப்பிரச்னை: இம்மாத இறுதிக்குள் அறிக்கை
தனியார் பள்ளிகள், இட பிரச்னை குறித்து ஆய்வு செய்து வரும் நிபுணர்
குழு, இம்மாத இறுதிக்குள், தமிழக அரசிடம், அறிக்கையை சமர்ப்பிக்க
திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மகுடம் சூட்டிய ஆசிரியர்கள்
ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, மகுடம் அணிவித்து,
"இளவரசர், இளவரசி" பட்டம் சூட்டி, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்
மகிழ்வித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 20 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து
திருப்பூர் மாவட்டத்தில், 20 நர்சரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டு, "நோட்டீஸ்" வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 231
நர்சரி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, மாவட்ட
துவக்க கல்வி அலுவலகத்தில் தரச்சான்றுக்கான அங்கீகாரம் பெற வேண்டும்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி மாணவன் திறனை முடக்கும்; கல்விக் கருத்தரங்கில் தகவல்
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி என்பது மாணவன்
சிந்திப்பதற்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் என மதுரையில் நடந்த
கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் எதிர்கொள்வது எப்படி?
குழந்தைகள் மனரீதியாக சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இவை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் பேட்டி அளித்தார்.
அடம் பிடிக்க காரணம் “பிரிவு பயம்” : பள்ளிக்கு முதன் முதலாக செல்லும்
குழந்தைகளுக்கு தான் பிரச்னைகள் அதிகம் என உளவியல் ஆராய்ச்சிகள்
தெரிவிக்கின்றன.
குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதால் பரபரப்பு
குடியாத்தம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிக்கு 2 பேர்
உரிமை கொண்டாடியதால் பரபரப்பு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த முதல்
நாளே பெற்றோர் அதிர்ச்சி.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று
திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 03ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை
வெயிலின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த
விடுமுறை ஜூன் 09 வரை நீடிக்கப்பட்டது.
அனைவருக்கும் தரமான உயர்கல்வி சாத்தியமாக வேண்டும்: எல்.பி.யு., துணை வேந்தர்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழக
துணைவேந்தர் ரமேஷ் கன்வர் தினமலர் கல்விமலருக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
தொழில்துறை வாய்ப்புகளுக்கான மேம்பட்ட படிப்புகள்
எதிர்கால உலகில், பெரியளவில் வளர்ச்சியடையக்கூடிய சில துறைகளைப் பற்றி
அறிந்துகொள்வது அவசியம். அதன்மூலம் நமது வருங்கால வாய்ப்புகளை
அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள்
அச்சடிக்கப்பட்டு விற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் அனுப்பி
வைக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும்
17–ந்தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
எஸ்.எஸ்.எல்.சி பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் அனைத்து அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில்
எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தலைமை
ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் கவுன்சிலிங்: முறையான தகவல் தெரிவிக்காத அரசு கல்வி நிறுவனங்கள்
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய பொது மருத்துவ நுழைவுத்
தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள் 5ம் தேதி வெளியிடப்பட்டன. தேர்ச்சி அடைந்த
மாணவர்கள் எப்படி கவுன்சிலிங்கில் கலந்துகொள்வது? மற்றும் அட்மிசன்
விபரங்கள் போன்றவை குறித்து தெளிவான தகவலின்றி தவித்து வருகின்றனர்.
பி.ஆர்க்., விண்ணப்பம்: 10 தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு
"பி.ஆர்க்., விண்ணப்பங்களை, வரும், 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்" என அண்ணா பல்கலை பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரிய ராஜ்
தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு - தமிழகத்தில் 50% தேர்ச்சி
இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு
நடத்தப்பட்ட என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், தமிழகத்தில்
தேர்வெழுதியோரில், 50% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தகுதி சான்றிதழ் வழங்க தகுதியற்ற வாகனங்கள்: ஆய்வில் அம்பலம்
தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 679 பள்ளி
வாகனங்கள், தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு தகுதியற்றவை, என,
கண்டறியப்பட்டுள்ளது. நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,
பள்ளி வாகனங்களின் ஆய்வு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்ட பள்ளி: முதல்வர் உத்தரவு
ஸ்ரீரங்கத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடந்து வரும் தேசிய
சட்டப் பள்ளிக்கான கட்டுமான பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க,
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்கு கட்டுமானப் பணிகள், விரைவாக
நடந்து வருகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
சென்னை மருத்துவக் கல்லூரி, எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக உயர்த்திக்
கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள, அரசு மருத்துவக் கல்லூரியில்,
மாணவர் சேர்க்கைக்கும், எம்.சி.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
முழுமை பெறாத இடைநிற்றல் கல்வி உதவித்தொகை திட்டம்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க, அரசு
கொண்டு வந்த கல்வி உதவித்தொகை திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.
ஜிப்மர் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 150 எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, கடந்த 2ம் தேதி நடந்தது. 52 ஆயிரத்து,
298 பேர், தேர்வை எழுதினர். முடிவு வெளியிடப்பட்டது.
எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் 10ம் தேதி முதல் வினியோகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், எம்.பி.ஏ., -
எம்.சி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 10ம் தேதி
முதல், 29ம் தேதி வரை வழங்கப்படுகிறது.
இலவச லேப்டாப்: பிளஸ் 2 மாணவர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை,
அரசு செயல்படுத்தி வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இதுவரை இலவச
லேப்டாப் வழங்காததால், ஏமாற்றத்தில் உள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அரசு கட்டணம் வசூலிக்க கோரிக்கை
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என சிதம்பரம் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி ஊழியர் கைது - Dinamalar
ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய, தொடக்க கல்வி அலுவலக கிளார்க்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்? அமைச்சர் கேள்வி
அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து, அதிகாரிகளிடம், கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், கேள்வி எழுப்பினார்.
புள்ளியியல் துறை ஆணை: கிராமப்புற மாணவர்கள் வேலைவாய்ப்பு பறிப்பு?
தமிழ்நாடு அரசு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், சமீபத்தில்
போடப்பட்ட அரசாணை, பொருளியல், கணிதவியல் படித்த, கிராமப்புற மாணவர்கள்,
பணியில் சேரும் வாய்ப்பை தடுப்பது, மாணவர்களிடம் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிகளில் அரசியல் தலையீடு: தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
அரசு பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், அரசியல்
தலையீடு அதிகரித்து உள்ளதால், மாணவர் சேர்க்கையை, பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது
பாலிடெக்னிக் கல்லூரிகளில், இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது.
பொறியியல் சேர்க்கை - ரேண்டம் எண் வெளியீடு
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண், இன்று(ஜுன் 5ம் தேதி)
வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் சுழற்சி எண் என்று இது அழைக்கப்படுகிறது.
பொறியியல் படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வம் இல்லை
பி.இ., படிப்பில் சேர, மாணவியர் மத்தியில் ஆர்வம் இல்லாதது, தெரிய
வந்துள்ளது. பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட, 1.89 லட்சம்
விண்ணப்பங்களில், மாணவியர் எண்ணிக்கை, வெறும், 74 ஆயிரம் தான். மாணவர்கள்,
1.14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆர்கிடெக்சர் துறை என்பது நீங்கள் நினைப்பதுபோல் அல்ல...
நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து,
முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல்,
வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல்
ஆர்கிடெக்சர் எனப்படும்.
10ம் வகுப்பு உடனடித்தேர்வு: மாணவ, மாணவியர் அவதி
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வுக்கு, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க,
நேற்று கடைசி நாள் என்ற நிலையில், இணைய தளம் முடங்கியது. இதனால், பதிவு
செய்ய முடியாமல், மாணவ, மாணவியர், கடும் அவதிப்பட்டனர்.
கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
சென்னையில் டவுட்டன் பகுதியில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நிரம்பி வழியும் பள்ளி வாகனங்கள்: புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை
பள்ளி வாகனங்களில், அதிகளவில் மாணவர்கள் ஏற்றிச் செல்வது குறித்து,
புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என,
போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வரும், ஜூன், 10ம் தேதி பள்ளிகள்
திறக்கப்படுகின்றன.
சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலம் கட்டாயமா? மத்திய அரசுக்கு உத்தரவு
"ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில், ஆங்கில
திறன் அறியும் தேர்வு அவசியம் என்ற, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின்
முடிவை, ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும்" என மத்திய
அரசுக்கு, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவக்கம்
தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக, 398 பாடப்
பிரிவுகள், நடப்பு கல்வியாண்டில் துவங்கப்படுகின்றன. புதிதாக
துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில், வேலைவாய்ப்பு சந்தையில், தற்போது
நிலவும் தேவையை கருத்தில் கொண்டு, முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,
மேற்படிப்பில் சேரும் போது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகளுக்கே, அதிக
முக்கியத்துவம் தருகின்றனர். அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகள்
வேலை வாய்ப்பு தரும் கல்வி படிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால், தனியார்
கல்லூரிகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கல்லூரி தேர்வு கட்டணம் உயர்வு: மாணவர்கள் எதிர்ப்பு
கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில்,
முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.
ஜெ.இ.இ., நுழைவு தேர்வு: தமிழக மாணவர்களிடையே ஆர்வமின்மை ஏன்?
பாடப்பளு, போதிய பயிற்சி மையங்கள் இல்லாத நிலை உள்ளிட்ட காரணங்களால்,
ஜெ.இ.இ., எனப்படும் ஒரே நுழைவு தேர்வில், தமிழக மாணவர்கள் அதிகளவில் ஆர்வம்
காட்டுவதில்லை என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என இந்திய
தலைமை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சிகளிடம்
இருந்து எழுத்து பூர்வமான எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம். மேலும்
கட்சிகள் வாங்கிய நன்கொடை , செலவு விவரங்களையும் மக்கள் அறிந்துக்
கொள்ளலாம்.
பிளஸ் 1 சேர்க்கை: பள்ளிகளில் மாணவர் கூட்டம் அலைமோதல்
மாநிலம் முழுவதும், பள்ளிகளில், பிளஸ் 1 சேர்க்கை, நேற்று துவங்கியது. 8
லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அதிக மதிப்பெண்களை குவித்ததால்,
அனைத்து மாணவர்களும், இன்ஜினியர், மருத்துவம் சார்ந்த குரூப்களை கேட்டு,
நச்சரிப்பதால், தலைமை ஆசிரியர்கள், திண்டாடி வருகின்றனர்.
போக்குவரத்து குழுக்களை அமைக்காத பள்ளிகளுக்கு 6 நாள் கெடு
போக்குவரத்து துறை ஆய்வில், 3,084 பள்ளிகளில், போக்குவரத்து குழுக்கள்
அமைக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆறு நாட்களுக்குள் போக்குவரத்து
குழுக்களை அமைக்க வேண்டும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்கள்
"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல்
போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, ஆஸ்திரேலிய நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவு: கடந்த ஆண்டை விட மோசம்
கடலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம்
வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்
தேர்ச்சி சதவிகிதம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும்
ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தனியார்
துறைகளில் வேலை வாய்ப்பு பெற, ஜூன் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற
உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
எம்.ஐ.டி.,யில் எம்.எஸ்., படிக்க என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு
சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும்,
அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்.
தலைமை பணியிடங்கள் காலி: தடுமாறும் கல்வித்துறை
கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்
என தலைமை பணியிடங்கள் பல, காலியாக கிடப்பதால் பணிகள் பாதித்துள்ளன.
ஒப்பிட முடியாத வெற்றி
அனைத்து வசதிகளும் உள்ள பள்ளி மாணவர்களால் மட்டும்தான்
சாதிக்க முடியுமா என்ன...? எந்த சப்தத்தையும் கேட்காமலே, எந்த
வார்த்தையையும் உச்சரிக்காமலே எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை
நிரூபித்துள்ளனர் கோவை மாநகராட்சி காது கேளாதோர் பள்ளி மாணவர்கள்.
பயிற்சி சார்ந்த படிப்பே தற்போதைய தேவை: சி.ஐ.டி., தலைவர்
சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவர் ஸ்ரீராம் தினமலருக்கு அளித்த பேட்டி:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் - பெண்களுக்கும் ஏற்ற துறையே!...
ஒரு மாணவியிடமோ அல்லது அவரின் பெற்றோரிடமோ சென்று, நீங்கள் ஏன்
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யவில்லை என்று கேட்டால்,
கனமான இயந்திரத்தை கையாள முடியாது என்றே பதில் வரும்.
ஒரே நாளில் 17 கல்வி அதிகாரிகள் ஓய்வு: பள்ளி துவங்கும் நேரத்தில் பணி பாதிப்பு
கல்வித் துறையில், கடந்த, 31ம் தேதி, 17 கல்வி அதிகாரிகள், ஒரே நாளில்
பணி ஓய்வு பெற்றனர். பள்ளி துவங்கும் நேரத்தில், காலி பணியிடங்களை
நிரப்பாவிடில், பணிகள் பாதிக்கும் என, ஆசிரியர்கள், ஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.
கட்டாய படிப்பு கரை சேர்க்குமா?
பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை,
சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது? மேற்படிப்பு என்பதே அடுத்து
தொழில், வேலை செய்யும் துறையைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பயிற்சி
பெறுவதற்கும் தான்.
பத்தாம் வகுப்பு தேர்வும் எதிர்காலமும்
பள்ளிக்கூடத்தில் படிக்கும்பொழுது விளையாட்டுத்தனம் மட்டுமே மனம் முழுதும் மேலோங்கி இருக்கும்.
பி.இ., முதல் ஆண்டு மாணவர்களுக்கு கணித பாடத்தில் சிறப்பு பயிற்சி
பி.இ., முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு, கணிதப் பாடம்
துவங்குவதற்கு முன், 15 மணி நேரம் பயிற்சி அளிக்க, அண்ணா பல்கலை, ஏற்பாடு
செய்துள்ளது. இதற்காக, முதலில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி
ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சி குறித்து, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள் 250 ஆக அதிகரிப்பு
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், எம்.பி.பி.எஸ்., இடங்களை, 250 ஆக
உயர்த்திக் கொள்ள, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி அளித்து
உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த
எம்.பி.பி.எஸ்., இடங்கள், 2,245 ஆக உயர்ந்துள்ளது.
எம்.ஜி.ஆர்., திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை
எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்,
புதிதாக துவக்கப்பட்ட, நவீன தொழில் நுட்ப பட்டயப் படிப்பில், சேர
விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவிகிதம் குறைவு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, பாடம்
வாரியாக ஆய்வு செய்யும்போது, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி விகிதம்
உயர்ந்துள்ளது; சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் தேர்ச்சி விகிதம், 3.51
சதவீதம் சரிவடைந்துள்ளது தெரியவருகிறது.
குளறுபடிகள், சர்ச்சைகள் குவிந்தும் 10ம் வகுப்பு தேர்வில் சாதனை நடந்தது எப்படி?
பத்தாம் வகுப்பு தேர்வில், வரிசையாக பல குளறுபடிகள்
நடந்தும், அதையும் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள்
வந்திருப்பது, பலரது மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி சேர்க்கைக்கு மாணவர்களை தேடும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி
ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களை சேர்க்க, கிராமம் கிராமமாக
மாணவர்களை தேடி அலைகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)