கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு, ஜூலை நான்காம் வாரத்தில் துவங்குகிறது.
இதுகுறித்து, கால்நடை மருத்துவ
பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ
பல்கலைக்கழகத்தின் கீழ், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை
பராமரிப்பு (பி.வி.எஸ்சி.,), மீன் வள அறிவியல் (பி.எப்.எஸ்சி.,), உணவு
தொழில்நுட்பம் (பி.டெக்.,), கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் (பி.டெக்.,)
உள்ளிட்ட, இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கு மொத்தம், 360 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கு,
இந்தாண்டு, மொத்தம், 15 ஆயிரத்து 796 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல்www.tnuvas.ac.in என்ற
பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை கால்நடை மருத்துவ
கல்லூரிகளின் தகவல் பலகையிலும், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களின்
குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான தரவரிசை பட்டியல் விரைவில்
வெளியிடப்படும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வேப்பேரி, கால்நடை மருத்துவ
கல்லூரியில், ஜூலை மாதம், நான்காம் வாரத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு
கூட்டத்திற்கான அழைப்புக் கடிதம், மாணவர்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment