"பி.ஆர்க்., விண்ணப்பங்களை, வரும், 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க
வேண்டும்" என அண்ணா பல்கலை பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரிய ராஜ்
தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: தேசிய கட்டடக் கலை தகுதி தேர்வு மதிப்பெண் சான்றிதழை,
வரும், 10ம் தேதி வரை பெறாத மாணவர்கள், அதன்பின், 25ம் தேதிக்குள்,
பொறியியல் சேர்க்கை செயலருக்கு, மதிப்பெண் சான்றிதழை அனுப்பி வைக்க
வேண்டும். "செயலர், பொறியியல் சேர்க்கை, அண்ணா பல்கலை, சென்னை- 25" என்ற
முகவரிக்கு, மதிப்பெண் சான்றிதழை அனுப்ப வேண்டும். 25ம் தேதிக்குப் பின்
அனுப்பினால், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment