தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வு துவங்கியது. விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெற
உள்ளது. ஜூலை, 2ம் தேதி பொது பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்குகிறது.
தமிழகத்தில், 490 அரசு, அரசு உதவி
பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக்கள் உள்ளன. இதில், கட்டடவியல், கட்டட
அமைப்பியல், மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல், கருவியல் மற்றும்
கட்டுப்பாட்டு பொறியியல் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், ஜூன், 5ல்
துவங்கி, 24ம் தேதி முடிந்தது. தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு
செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு
கடிதமும், மாணவருக்கு அனுப்பப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன், 27ம்
தேதி துவங்கியது.
மாற்றுத்திறனாளி மாணவருக்கான கலந்தாய்வு, நேற்று முன்தினமும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு நேற்றும், கலந்தாய்வு நடந்தது.
இதுகுறித்து, சென்னை, தரமணி டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள்
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சொர்ணகுமார் கூறியதாவது: இந்தாண்டு,
கட்டடவியல், ஆடை வடிவமைப்பு, மின்னணுவியல், கணினிப்பொறியியல் உள்ளி ட்ட
படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கல்லூரியில் மொத்தமுள்ள, 390 இடங்களுக்கு, 800 பேர்
விண்ணப்பித்துள்ளனர். எங்கள் கல்லூரியில், வரும், 3ம் தேதி கலந்தாய்வு
துவங்க உள்ளது. விண்ணப்பித்த அனைவரும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு, சொர்ணகுமார் கூறினார்.
No comments:
Post a Comment