உணவு பற்றிய படிப்பை ஒரு சிறந்த ஆர்வமூட்டும் படிப்பாக கருதும்
மாணவர்களுக்கு, அத்தொழில்துறையில், பல அற்புதமான வாய்ப்புகள்
காத்துக்கிடக்கின்றன.
எனவே, இத்துறையில் ஆர்வமுள்ள
மாணவர்கள், வருங்காலத்தில், தங்களின் தொழிலை இத்துறையில் அமைத்துக்கொள்ள,
உணவு தொழில்நுட்பம் மற்றும் பயோகெமிக்கல் இன்ஜினியரிங் எனும் பெயரில்
வழங்கப்படும், 4 வருட இளநிலைப் படிப்பில் சேரலாம்.
இதுபோன்ற படிப்பை, இந்தியாவில் அதிக கல்வி நிறுவனங்கள் வழங்குவதில்லை
என்ற நிலையில், மேற்குவங்க மாநிலத்திலுள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்,
இப்படிப்பை வழங்குகிறது. இதில் சேர வேண்டுமெனில், மேற்குவங்க கூட்டு
நுழைவுத்தேர்வை எழுதி, முதல் 2000 மாணவர்களில் ஒருவராக வர வேண்டும். இது
ஒரு பாரம்பரிய படிப்பாக இல்லாவிட்டாலும், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும்
கற்பித்தலில் கடைபிடிக்கப்படும் தரம் ஆகிய காரணக்ஙளுக்காக, அதிகளவிலான
மாணவர்கள், இப்பல்கலையில், இப்படிப்பில் சேருகிறார்கள் என்று அப்பல்கலை
வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், இந்தப் படிப்பானது, இத்துறையில் தீவிரமாக ஈடுபட விரும்பும்
மாணவர்களுக்கு, பெரியளவிலான வாய்ப்புகளை இப்படிப்பு பெற்றுத்தருகிறது.
மேலும், இதுதொடர்பான, பயோடெக்னாலஜி, புட் ப்ராசஸிங் மற்றும் இதர தொடர்புடைய
ஸ்பெஷலைசேஷன் படிப்புகளை மேற்கொள்ளலாம்.
புற்றுநோய் மற்றும் இதர நோயாளிகளுக்கு ஏற்ற உணவை தயாரிக்கும்
முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கனடா போன்ற நாடுகளில் இத்துறைக்கான பணி
வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அந்நாட்டில், நியூட்ரிஷன் மற்றும்
ஹெல்த்கேர் துறைகள் இணைந்து செயல்பட்டு, தரமான உணவு உற்பத்தி செயல்பாட்டை
மேற்கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சிகளில்
ஈடுபட்டுள்ளன. அதுபோல், இந்தியாவிலும் அதுதொடர்பான வாய்ப்புகள் அதிகரித்து
வருகின்றன.
Food processing, Applied nutrition and biochemical processing போன்ற
துறைகள், வரும் காலங்களில் இந்திய சந்தைகளை ஆக்ரமிக்கவுள்ளன. மேற்கூறிய
படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், ஜாம், ஜெல்லி, பார்முலா உணவு, டெய்ரி,
பவுல்ட்ரி மற்றும் மாமிச தொழிற்சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை
தேர்ந்தெடுக்கலாம் அல்லது பயோடெக்னாலஜிகல் அறிவியல் துறையில்
மேற்படிப்பிற்கும் செல்லலாம்.
ஆன்டிபயோடிக் பிளான்ட்ஸ் தொடங்கி, பார்மசூடிகல் ஆராய்ச்சி வரை, பரவலான
முறையில் பல பணிவாய்ப்புகள் நிறைந்துள்ளன. நன்கு பயிற்சிபெற்ற நபர்களுக்கான
பணிவாய்ப்புகள் இத்துறைகளில் நிறைந்துள்ளன.
No comments:
Post a Comment