சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 9 ஆயிரத்தை தாண்டியது.
மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு, வரும், 10ம் தேதி வரை விண்ணப்பம்
வினியோகிக்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்
சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட,
ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., - மூன்றாண்டு
பி.எல்., சட்டப் படிப்பும், சென்னையில் உள்ள சட்டப் பள்ளியில், ஐந்தாண்டு
பி.காம்., - பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்), மூன்றாண்டு
பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு, மே, 20ம் தேதி விண்ணப்பம் வினியோகம்
துவங்கி, இம்மாதம், 14ம் தேதியோடு முடிந்தது. ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்.,
சட்டப் படிப்பில் மொத்தம் உள்ள, 1,052 இடங்களுக்கு, 4,500 விண்ணப்பங்களும்;
பி.காம்., - பி.எல்., சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 300
விண்ணப்பங்களும்; பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) படிப்பில் உள்ள, 120
இடங்களுக்கு, 800 விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து, சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறியதாவது:
மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கு உள்ள, 1,262 இடங்களுக்கு, 3,100
விண்ணப்பங்களும்; பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60
இடங்களுக்கு, 300 விண்ணப்பங்களும் விற்பனையாகி உள்ளன.
இப்படிப்புக்கு, ஜூலை, 10ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகிக்கப்படும்.
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் விரைவில்
வெளியிடப்படும். இவ்வாறு, சங்கர் கூறினார். ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு
சட்டப் படிப்புகளுக்கு, இதுவரை, 9,000 விண்ணப்பம் விற்பனையாகி உள்ளன.
No comments:
Post a Comment