உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட, 19 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள்
கண்டறியப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என,
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்தார்.
கட்டாயக் கல்விச் சட்டம், 2009ன்
படி, போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் உரிய
சான்றுகள் இன்றி அஙகீகாரம் பெறாமல் செயல்படும், 19 மழலையர் மற்றும்
தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர் யாரும் தங்கள் பிள்ளைகளை அப் பள்ளிகளில் சேர்க்க
வேண்டாம் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment