பத்தாம் வகுப்பு தேர்வில், வரிசையாக பல குளறுபடிகள்
நடந்தும், அதையும் தாண்டி, மிகப்பெரிய அளவிற்கு, தேர்வு முடிவுகள்
வந்திருப்பது, பலரது மத்தியிலும், வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
* கடந்த மார்ச், 28ல், 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள்
தேர்வு நடந்தது. இதில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய வங்கி செலான்,
கேள்வித்தாளுடன் வழங்கப்படவில்லை. இதற்காக, தேர்வு எழுதிய 10.51 லட்சம்
மாணவர்களுக்கும், ஐந்து மதிப்பெண்களை, தேர்வுத் துறை, சுளையாக வழங்கியது.
* "பார்சலில்" அனுப்பப்பட்ட தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்
கட்டுகள், விருத்தாசலம் அருகே, ரயில் தண்டவாளத்தில் விழுந்து, கடும் சேதம்
அடைந்தன. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள், தமிழ் முதல் தாளில்
பெறும் மதிப்பெண்கள், தமிழ் இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும் என, தேர்வுத்
துறை அறிவித்தது.
* ஏப்., 1ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே
சத்தியமங்கலம் அரசுமேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலம் முதல் தாள் தேர்வெழுதிய,
221 மாணவர்களின் விடைத்தாள் கட்டுகள், பஸ்சில் எடுத்துச் செல்லும்போது
மாயமாயின. கடைசி வரை விடைத்தாள் கட்டுகள் கிடைக்கவில்லை.
இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள், ஆங்கிலம்
இரண்டாம் தாளில் பெறும் மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கு
வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்தது.
* இவற்றுடன், மேலும் சில குளறுபடிகள், தேர்வில் நடந்தன.
விருத்தாசலத்தில், விடைத்தாள் சேதம் அடைந்த விவகாரமும், செஞ்சியில்,
விடைத்தாள் கட்டுகள் மாயமான விவகாரமும், சட்டசபை வரை வெடித்தது. ஆனால்,
"இரண்டு சம்பவங்களுக்கும், நாங்கள் காரணம் இல்லை" எனக் கூறி, தேர்வுத் துறை
தப்பித்துக் கொண்டது.
கணிதத் தேர்வு, மிகவும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள்
தெரிவித்தனர். இவ்வளவு நடந்தும், தேர்வில், இமாலய அளவிற்கு, சாதனை
நிகழ்ந்தது எப்படி என்பது, ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்குமே
புரியவில்லை.
அதிலும், முக்கிய பாடங்களில், கடந்த ஆண்டை விட, 20 மடங்கு,
30 மடங்கு அளவிற்கு, "சென்டம்" அதிகரித்திருப்பதும், அதிகாரிகளின்
புருவங்களை விரிய வைத்துள்ளது.
சமச்சீர் கல்வி பாடத்திட்டம் வெளியான போது, மெட்ரிக் பாடத்
திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இல்லை என்றும்,
பாடத்திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு நர்சரி,
பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், பலமுறை
கூறினார்.
இந்நிலையில், நேற்றைய தேர்வு முடிவு குறித்து, அவர்
கூறியதாவது: பெரிய ரகசியம் ஒன்றும் கிடையாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம்,
எங்களுக்கு ஈசி; அரசு பள்ளிகளுக்கு கஷ்டம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை
விட, உயர்தர பாடத்திட்டங்களை படித்தவர்கள் மெட்ரிக் மாணவர்கள்.
அதனால், சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள், தனியார் பள்ளி
மாணவர்களுக்கு, மிகவும் எளிதாக இருந்தது. அரசுபள்ளிகளில், எவ்வளவோ பயிற்சி
கொடுத்தனர்; எனினும் எடுபடவில்லை. இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
ஆனால் சில ஆசிரியர்கள் கூறும்போது, சென்ற வருடமே சமச்சீர் பாடதிட்டத்தின் அடிப்படையில் தான் தேர்வு எழுதினர். அப்போது ஏன் இத்தகைய மதிப்பெண்கள் வரவில்லை என வினவுகின்றனர்.
In the Tamilnadu state board examinations,unlike CBSE exams, all the questions are direct and taken from the exercise part without changing even a single word in the questions given in the text book.If a student studies the answers for those questions only, he can surely score 100 marks in maths, science and social science.Unless the question paper setting is improved, the students will not really be benefited from samacheer kalvi.The Aim of samacheer kalvi will be attained only when the students are really tested their understanding and analysing abilities instead of muggjng ability
ReplyDelete