கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கான டி.இ.டி., தேர்வு பயிற்சி
முகாம், தினமலர் சார்பில் மதுரையில் நாளை (ஜூன் 15) நடக்கிறது.
கல்வித்துறையில் இடைநிலைமற்றும்
பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் டி.இ.டி.,
தேர்வு (டீச்சர்ஸ் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) மூலம் நடைபெறுகின்றன. வருகிற ஜூலை
மாதம் நடக்கஉள்ள இத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நாளை, மதுரை பசுமலை மன்னர் திருமலை
நாயக்கர் கல்லூரியில் பயிற்சி முகாமை, தினமலர் நாளிதழ் நடத்துகிறது. காலை
10.30 முதல் மதியம் 1 மணி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1க்கும்,
மதியம் 3.30 முதல் மாலை 6 மணி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2க்கும்,
இரு அமர்வில் பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படும். அனுமதி இலவசம்.
பங்கேற்போரில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
பயிற்சி முகாமில் கல்வித்துறை நிபுணர்களின் சூப்பர் டிப்ஸ் ஆலோசனையாக
வழங்கப்படும்.
காலை அமர்வில், தமிழ் வினாக்கள் குறித்து திருமங்கலம் அரசு ஓமியோபதி
மருத்துவ கல்லூரி உதவியாளர் கணேசன், ஆங்கிலம் குறித்து நேஷனல்
இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி, கணிதம் மற்றும்
சூழ்நிலையியல் குறித்து அதே இன்ஸ்டிடியூட்டின் நிர்வாக இயக்குனர்
வெங்கடாசலம், குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும் குறித்து வேலம்மாள்
கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரகாஷ் ஆலோசனை வழங்குவர்.
மாலை அமர்வில், மேற்கண்ட நிபுணர்களுடன், கணிதம், சூழ்நிலை யியல்,
அறிவியல், வரலாறு, புவியியல், பொருளாதார வினாக்கள் குறித்து, வெங்கடாசலம்
ஆலோசனை வழங்குகிறார்.
No comments:
Post a Comment