காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும்
ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, தனியார்
துறைகளில் வேலை வாய்ப்பு பெற, ஜூன் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற
உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இம்முகாமில், கலந்து கொள்ள விரும்புவோர் ஒன்பதாம் வகுப்பு,
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்
பெறாதவர்கள், கலை மற்றும் அறிவியல் சார்ந்த பட்டம், பட்டயப்படிப்பு மற்றும்
தொழில்நுட்பம் சார்ந்த பட்டம், மருந்தக பிரிவில் பட்டயம் தேர்ச்சி
பெற்றவர்கள் ஆகியோர் வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு, அசல் சான்றிதழ்கள்
மற்றும் புகைப்படங்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய
இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் வளாகத்தில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில்
கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஒரு அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment