மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளில், 2013-14ம் கல்வியாண்டிற்கான, மாணவர்
சேர்க்கை பொது கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது.
இதற்கான கால அட்டவணை www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு கட்டணம், கலந்தாய்வின் போது, கொண்டு வரவேண்டிய
சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களையும், விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட இணைய
தளங்களில் பெறலாம்.
முன்னதாக, 18ம் தேதி விளையாட்டு வீரர்கள், மாற்றுத்
திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு
கலந்தாய்வு நடக்கிறது. இவர்களுக்கான தரவரிசை பட்டியலும், துறை
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு,
அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப்பெறாதோர், இணைய
தளத்தில் உள்ள கலந்தாய்வு அட்டவணைபடி, தங்களுக்கு உரிய நாளில் குறிப்பிட்ட
நேரத்தில், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக் கல்வி மாணவர்
சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment