பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல், 20ம் தேதி (நாளை) மாலைக்குள்
வெளியாக வாய்ப்புள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொறியியல் கல்லூரிகளின், 2011
-12ம் ஆண்டு தேர்ச்சி சதவீத புள்ளி விவரங்களை, 17ம் தேதிக்குள்,
இணையதளத்தில் வெளியிட, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. பொது கலந்தாய்வு, 21ம்
தேதி துவங்குகிறது. எனவே, 21ம் தேதிக்குள், பட்டியலை வெளியிடும் வகையில்,
ஐகோர்ட்டின் அனுமதியை, பல்கலை, நேற்று பெற்றதாக கூறப்படுகிறது.
எனவே, நாளை மாலைக்குள், 550 பொறியியல் கல்லூரிகளின், ரேங்க் பட்டியல்,
அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment