கல்லூரி தேர்வு கட்டணம், ஒரு பாடத்துக்கு, 45 ரூபாயிலிருந்து, 65
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு, நடப்பு கல்வியாண்டில்,
முதல் பருவ தேர்வில் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகளில்,
லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.கல்லூரிகளில், ஒவ்வொரு ஆண்டும்,
இரண்டு பருவ தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு கட்டணமாக, ஒரு
பாடத்துக்கு, 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேர்வு கட்டணத்தை, 45 ரூபாயிலிருந்து 65 ரூபாயாக உயர்த்தி,
உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டது. இக்கட்டண உயர்வுக்கு, ஆசிரியர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு கல்லூரிகளில், ஏழை மாணவர்கள் அதிகளவில்
படிப்பதால், அவர்களும், கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு கல்லூரி ஆசிரியர் சங்க பொது செயலர் தமிழ்மணி
கூறுகையில், "ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி, அதில் நிதியாரத்தை
பெருக்க வழி தேடுவது கண்டனத்துக்குரியது. அரசு அறிவித்துள்ள தேர்வு
கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment