ஈரோடு மாவட்டத்தில் 2013-14ம் ஆண்டில் 180 கோடி ரூபாய்
கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்யின்
ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர் தெரிவித்தார்.
அகில இந்திய கட்டுனர் சங்கத்தின், ஈரோடு மையம் சார்பில்,
வங்கி அதிகாரி மற்றும் கட்டுனர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம்
நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர், சங்க
நிர்வாகிகள் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டுமே ஈரோட்டில் மண்டல
அலுவலகத்தை அமைத்துள்ளது. அது மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் மட்டும்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 44 கிளைகள் உள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு 100 கோடி
ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 180 கோடி ரூபாய் கல்வி
கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள், வேலை
உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் வங்கி சேவை அமைப்பாளர்கள் மொத்தம் 29
வங்கிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment