தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயத்த கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என சிதம்பரம் மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது.
சிதம்பரம் நகர மா.கம்யூ., நகர்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இதில் 2013-14ம் கல்வியாண்டில் தனியார் மெட்ரிக் முறை ஆங்கில பள்ளிகளில்
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும். கூடுதல்
கட்டணம் வசூல் செய்யும் பள்ளிகள் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் உடன்
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மாணவர்கள் இடத்தில் பெறுவதை உறுதி
செய்திட வேண்டும்.அரசு ஒதுக்கீடு 25 சதவீதம் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு
போல் இல்லாமல், இந்த ஆண்டு முழுவதுமாக மெட்ரிக் பள்ளிகள் கடைபிடிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment