இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆஃப் டெக்னாலஜி - காந்திநகர் புதிய முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐ.ஐ.டி. காந்திநகர் எம்.எஸ்சி. காக்னிடிவ் சயின்ஸ் என்ற
புதிய முதுநிலை படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு வருட படிப்பாக
அளிக்கப்படும் இப்படிப்பு அனைத்து ஐ.ஐ.டி.களிலும் அளிக்கப்படும்.
காக்னிட்டிவ் சயின்ஸ் எனப்படும் உள்ளார்ந்த அறிவியல்
சம்பந்தமான இத்துறையானது வரும் தலைமுறைக்கான அறிவுசார் நுட்பங்களை
வளர்ப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
இது குறித்து ஐ.ஐ.டி. காந்திநகர் இயக்குநர் எஸ்.கே. ஜெயின் கூறியதாவது, "எம்.எஸ்சி. காக்னிட்டிவ் சயின்ஸ் படிப்பு முதன் முதலாக காந்திநகர் ஐ.ஐ.டி. இல் தொடங்கப்படுகிறது. மொத்தம் 15 இடங்களைக்கொண்ட இப்படிப்பிற்கு இது வரை 500 விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். வகுப்புகள் ஜூலை முதல் நடைபெறும்." என்றார்.

காக்னிட்டிவ் சயின்ஸில் அறிவு, மூளையின் செயல்பாடுகள்,
தத்துவம், உளவியல், செயற்கையான நுண்ணறிவு, நரம்பியல், மொழியியல் மற்றும்
மானுடவியல் ஆகிய பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
ஐ.ஐ.டி. காந்திநகரில் காக்னிட்டிவ் சயின்ஸ் துறை 2
ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இங்கு இத்துறை சார்ந்த சில
படிப்புகளை ஆராய்ச்சி மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.
மேலும் இது குறித்து பேராசிரியர் ஜெய்சன் மஞ்சலை
கூறியதாவது, "நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி போன்றவற்றோடு 21ம்
நூற்றாண்டின் அறிவுசார் தூண்களில் ஒன்றாக காக்னிட்டிவ் சயின்ஸ் துறை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது." என்றார்.
No comments:
Post a Comment