"வரும், 24ம் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கியதும்,
ஒரு கோடி பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என
பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் சரவணவேல் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கடந்த, 10ம் தேதி,
பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ,
மாணவியருக்கு, 4.25 கோடி புத்தகங்கள், இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்காக, 2.62 லட்சம், தமிழ் பாட புத்தகங்கள்
வினியோகிக்கப்பட்டன.
பிளஸ் 1 வகுப்புகள், வரும், 24ம் தேதி துவங்கும் என, தமிழக அரசு
அறிவித்துள்ளது. பிளஸ் 1 வகுப்புகள் திறக்கப்படும் அன்று, அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பிளஸ் 1 பாடப்புத்தகங்கள்
வழங்கப்படும். சுயநிதி பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்களும்
வழங்கப்படும்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும், 1.05 கோடி புத்தகங்கள் வழங்கப்படும்.
முதல் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான புத்தகங்களும், பிளஸ் 2
புத்தகங்களும், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள பாடநூல்கழக அலுவலகத்தில்,
விற்பனைக்கு, போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சரவணவேல்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment