டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில், தமிழ் பாடங்களுக்கு
அதிக முக்கியத்துவம் இருப்பதால், கலைக்கல்லூரிகளில் தமிழ் பாட பிரிவிற்கு
மவுசு அதிகரித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில், டிகிரி
முடிக்கும் பலர் டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளை எழுதுவதில் ஆர்வம்
காட்டுகின்றனர். குரூப் 2 மற்றும் 4 தேர்வுகளில் திருக்குறள், இலக்கணம்,
இலக்கியம், நூலாசிரியர்கள் என, தமிழ் பாடத்தில் இருந்து 80 வினாக்கள் வரை
கேட்கப்படுகிறது. இதனால், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கருதுவோர்,
பட்டப்படிப்பில் தமிழை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கலைக் கல்லூரிகளில், கடந்த ஆண்டுகளை விட, இவ்வாண்டு தமிழ் இலக்கிய
பாடப்பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும்
நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட 5 முதல் 8 மடங்கு விண்ணப்பங்கள்
வந்துள்ளன.
உதவி தமிழ் போராசிரியர் இளவரசன் கூறும் போது, "முன்பு தமிழ்பாட பிரிவில்
யாரும் சேரமாட்டார்கள்.வேறு பாடப்பிரிவு கிடைக்காதவர்கள் தான் தமிழில்
சேருவர். தற்போது, போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
போட்டி தேர்வில் தமிழுக்கு முக்கியம் இருப்பதால், தமிழ்பாடத்தில் சேர
ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.
No comments:
Post a Comment