வான்வழி தொழில்நுட்பங்கள் வணிகமயமாதலோடு கூடிய விமானப் போக்குவரத்து
துறையில் ஏற்பட்டு வரும் அபரிமித வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, ஆயிரக்கணக்கான
பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
அவர்கள் வெறுமனே, மேலாண்மைப்
பணிகளை மட்டும் மேற்கொள்பவர்களாக இல்லாமல், தங்களின் தொழில் தொடர்பான சட்ட
விஷயங்களை கையாளும் திறமைப் பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற தேவை
உள்ளது.
ஏவியேஷன், ஸ்பேஸ், டெலிகம்யூனிகேஷன், ஜி.ஐ.எஸ் அன்ட் ரிமோட் சென்சிங்
சட்டம் ஆகிய பிரிவுகளில் பல புத்தாக்க படிப்புகளை இந்த 2013ம் ஆண்டில்,
ஐதராபாத்தின் நல்சார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.
தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய இதன்
வகுப்பறை செயல்பாடுகள், பெங்களூர், குவஹாத்தி, டெல்லி, ஹைதராபாத் மற்றும்
மும்பை போன்ற இடங்களில் நடைபெறும்.
இப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், சர்வதேச அளவில் டெலிகாம் மற்றும்
ஏரோஸ்பேஸ் துறைகளில் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறும் நோக்குடன்
தயாரிக்கப்பட்டுள்ளதாக, நல்சார் பல்கலையின் பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர். வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, ஏவியேஷன், ஸ்பேஸ்
மற்றும் டெலிகாம் சட்டங்கள் ஆகிய துறைகளிலுள்ள அகடமிக் - தொழில்துறை
கூட்டுறவில் உள்ள சிக்கல்களை நீக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக
நல்சார் பல்கலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பு படிப்புகள்
மேற்கூறிய சட்ட சிக்கல்களை கையாளும் வகையில்,
Aviation Law and Air Transport Management - 2 years Master&'s degree
Space Technology and Telecommunications Law - Master&'s Degree
Aviation Law and Air Transport Management and GIS and Remote Sensing Laws - 1 year Post graduate Diploma
Space Technology and Telecommunications Law - Master&'s Degree
Aviation Law and Air Transport Management and GIS and Remote Sensing Laws - 1 year Post graduate Diploma
போன்ற படிப்புகளை நல்சார் பல்கலை வழங்குகிறது. உலகின் வெகுசில
பல்கலைகளே, இதுபோன்ற சிறப்புநிலை படிப்புகளை வழங்குகின்றன. எக்ஸிகியூடிவ்
மற்றும் சயின்டிஸ்ட் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு, மேற்கூறிய
படிப்புகள் சிறப்பாக துணைசெய்யும் வகையில் அமைந்துள்ளன.
சரியான நேரம்
இந்தியப் பொருளாதாரமானது, தற்காலிக பின்னடைவுக்குப் பிறகு, இப்போது
ஏற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. பல விமான நிலையங்கள் தனியார்
மயமாக்கப்பட்டு வருவதோடு, பல புதிய விமான நிலையங்களும் உருவாகி வருகின்றன.
எனவே, விமானப் போக்குவரத்து சட்ட நிபுணர்கள், மேலாண்மை நிபுணர்கள் மற்றும்
ஏரோநாடிகல் இன்ஜினியர்கள் ஆகிய பணி நிலைகளில், அதிகளவு மனிதவள தேவை
நிலவுகிறது.
மேலும், விமான நிறுவனங்கள், வேறுபல புதிய தொழில்துறைகளிலும் தற்போது
நுழையத் தொடங்கியுள்ளன. ஏனெனில், சமீபத்தில், டாடா சன்ஸ் மற்றும் ஏர் ஆசியா
ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தே இதற்கு உதாரணம்.
மேற்காசியாவில் உள்ள Emirates, Etihad, Qatar போன்ற விமான நிறுவனங்கள்
தொடர்ச்சியாக வளர்ந்து வருவதோடு, உள்கட்டமைப்பும் தொடர்ந்து மேம்பட்டு
வருகிறது. துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களின் விமான
நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்துக்கு
ஈடுகொடுக்கும் வகையில் வளர்ந்து வருகின்றன.
பல ஏரோஸ்பேஸ் தொழில் நிறுவனங்கள், விமானப் போக்குவரத்து துறையின்
வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றன. எனவே, மேம்பாட்டிற்கு ஏற்ற மனிதவளம் அதிகமான
தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில்தான், நல்சார் பல்கலையின்
சிறப்பு படிப்புகள் கைகொடுக்கின்றன என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
இப்படிப்பில் சேர...
குறைந்தபட்சம் ஏதேனுமொரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த
மாணவர்கள், இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். நோக்க அறிக்கை(Statement
of Purpose), குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்
அடிப்படையில் மாணவர்கள், இறுதியான தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அதேசமயம், சம்பந்தப்பட்ட தொழில்துறைகளில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம்
பெற்றவர்களுக்கு, சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பொதுவாக,
இப்படிப்புகளில், பணிபுரியும் எக்ஸிகியூடிவ், பொறியாளர்கள், விஞ்ஞானிகள்,
எம்.பி.ஏ., படித்தவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல், எம்.பி.ஏ., சட்டம்
போன்ற படிப்புகளைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் ஆகியோர், மேற்கூறிய
படிப்புகளை நோக்கி அதிகம் வரக்கூடியவர்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
பணி வாய்ப்புகள்
தற்போது, ஏர்லைன் துறையில், ஏர்லைன் மேலாளர்கள், வணிக மேம்பாட்டு
மேலாளர்கள், மார்க்கெடிங் மேலாளர்கள், பாதுகாப்பு மேலாளர்கள், ஆபரேஷன்
மேலாளர்கள், இன்டர்நேஷனல் ரிலேஷன் மேலாளர்கள், ஏவியேஷன் சட்ட நிபுணர்கள்,
விமானப் போக்குவரத்து மேலாளர்கள், மனிதவளத் துறை மேலாளர்கள், நிதி
மேலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகிய பணி நிலைகளில் அதிக
மனிதவளம் தேவைப்படுகிறது.
எனவே, Aviation Law மற்றும் Air Transport Management ஆகிய துறைகளில்
சிறப்பு படிப்புகளை மேற்கொண்டவர்கள், மேற்கூறிய பணிநிலைகளில் சிறப்பாக
செயல்பட்டு சாதிக்க முடியும்.
No comments:
Post a Comment