தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண், இன்று(ஜுன் 5ம் தேதி)
வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் சுழற்சி எண் என்று இது அழைக்கப்படுகிறது.
ரேண்டம் எண் வெளியீட்டு
நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், உயர்கல்வித்துறை
செயலர், தொழில்நுட்பக் கல்வி கமிஷனர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக
துணைவேந்தர் ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே, ஜுன் 5ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும் என்று
அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அந்த எண் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள், http://tanca.annauniv.edu/random13/ என்ற வலைத்தளம் சென்று, தங்களின் விண்ணப்ப எண்ணை உள்ளிட்டு, தங்களுக்கான ரேண்டம் எண்ணை பெற்றுக்கொள்ளலாம்.
ரேண்டம் எண் எதற்காக?
பொறியியல் படிப்பிற்கு, இரண்டு மாணவர்களுக்கு இடையே போட்டி
ஏற்படும்போது, அந்த இரண்டு மாணவர்களும், பிளஸ் 2 தேர்வில், ஒரேமாதிரியான
மொத்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கலாம். அப்போது, கணிதத்தில் யார் அதிக
மதிப்பெண் என்று பார்க்கப்படும். அதிலும், ஒரேமாதிரி இருந்தால், இயற்பியல்
பாடத்தில் யார் அதிகம் என்று பார்க்கப்படும்.
அதிலும், ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், வேதியியல் மதிப்பெண்
பார்க்கப்படும். ஆனால் அதிலும் சம மதிப்பெண்கள் என்ற நிலை ஏற்பட்டால், அந்த
இருவரின் பிறந்த தேதி பார்க்கப்படும். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு
முன்னுரிமை வழங்கப்படும். ஆனால், பிறந்த தேதியும் ஒரே மாதிரி அமையும்போது,
இந்த ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். இதனடிப்படையில், தேர்ந்தெடுக்கப்படும்
மாணவருக்கு பொறியியல் இடம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment